நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

336

பர்த்டே பிரஷாந்துக்கா ..? சமுத்திரகனிக்கா .?!

சிம்ரன் , ப்ரியாஆனந்த் , கார்த்திக் என மார்கெட் இழந்த நட்சத்திரங்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு தன் மகன் பிரஷாந்த் இழந்த மார்கெட்டை எட்டிப்பிடிக்க ., ‘மம்பட்டியான்’ தியாகராஜன் , ‘அந்தா தூன்’ இந்திப்படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீ-மேக் செய்துவருவது தெரிந்திருக்கலாம். இதில் கரண்ட்டாக தமிழில் மார்கெட்டில் இருக்கும் நடிகர்கள் யோகிபாபுவும், சமுத்திரகனியும் தான். இந்த இருவரில் சமுத்திரகனிக்கு இன்று (ஏப்ரல் – 26 ) பிறந்தநாள். இவர்களை கூட வைத்துக்கொண்டு மகனை மீண்டும் உச்சத்திற்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மம்பட்டியான் விடுவாரா .?! ஷூட்டிங் ஸ்பாட்டில் சின்னதா ஒரு கேக்கை வரவழைத்து பிரஷாந்த் , சிம்ரன் , ப்ரியாஆனந்த்… புடைசூழ சமுத்திரகனி கையில் கத்திய கொடுத்து கேக் வெட்டி மொத்த ‘அந்தகன்’ யூனிட்டும் பெருசா ‘பர்த் டே’ கொண்டாடியிருக்கின்றனர். சமுத்திரகனியும் சிம்ரன் , ப்ரியா ஆனந்த் கூட இருந்த சந்தோஷத்துல மகிழ்ச்சியா போஸ் கொடுத்து கேக் வெட்டியிருக்கிறார்.

“இங்க ஃபோட்டோவ பார்த்தா, ஏதோ ‘பர்த்டே பாய்’ பிரஷாந்த் மாதிரியில போஸ் கொடுத்திருக்கிறார். ?! கனி கேக் வெட்டுற போட்டாவக் கூட மீடியாவுக்கு காட்டலை … மம்பட்டியான் ! அப்பாவும் பிள்ளையும் பெரும் சமுத்திரம் !! உஷாரா இருங்க கனி !!!” என நம் காது படவே முணுமுணுத்து சென்றார் நம் ஆபிஸ் பாய் அய்யாவு ! அட ஆமால்ல !!

😀 😆 😆 😆 😀