ரஜினிகாந்த் – சன் டி.வி – ‘சிறுத்தை’ சிவா – டி.இமான் கூட்டணியின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் தொடங்கி, தொடர்ந்து… நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா இன்று (ஏப்ரல்-27) தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியை தந்து வருகிறது.
‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்… என ஏகப்பட்ட நடிகைகளும் சூரி, பிரகாஷ் ராஜ்… என ஏராளமான நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
தற்போது, ரஜினி உள்ளிட்ட அத்தனை நட்சத்திரங்களும் பங்கு பெற ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் இந்தப்பட படப்பிடிப்பிற்கு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் பர்மிஷன் கொடுத்துள்ள தெலுங்கானா அரசு., அங்கும் நம் ஊரைப்போலவே இக்காலக்கட்டத்தில் இரவு ஊரடங்கு என்பதால் ,நைட் ஷூட்டிங்கிற்கு மட்டும் பர்மிஷன் கொடுக்கவில்லையாம்.
படத்தில் அவசியம் இடம் பெற வேண்டிய ஒரு சில நைட் எஃபெக்ட் காட்சிகளைக்கூட கேமிராவில் சில ஸ்பெஷல் ஃபில்டர்கள் , காஸ்ட்லி லென்ஸ்கள்… எல்லாம் போட்டு பகலையே இரவாக்கி படம்பிடித்து இந்த ஷெட்யூலை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் முடிக்க மொத்த யூனிட்டும் ஜரூராக வேலை பார்த்து வருகிறதாம்.
‘அண்ணாத்த ‘ இந்தாண்டு தீபாவளிக்கு நிச்சயம் ரிலீசாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸால் அறிவிக்கப்பட்டுள்ளதே..! இருக்காத பின்ன.?!
சன் குழுமத்தினுடையது தான் ஸ்பைஷ் ஜெட் ., எனவே , தனி விமானத்தில் நயன்தாரா ஹைதராபாத் பயணம், ‘அண்ணாத்த’ திட்டமிட்டபடி ஷூட்… எல்லாம் சரி. போன முறை கொரோனா ஆரம்ப காலகட்டத்தில்… இதே படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு கொரோனா … இல்லை , இல்லை… அவருக்கு வெறும் மூச்சு திணறல் தான்…. ஸ்பாட்டில் வேறு சிலருக்கு தான் கொரோனா, என்று செய்திகள் வெளியிடப்பட்டு ஹைதராபாத் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கிற்கும் ரஜினியின் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்திற்கும் ஒரு சேர பேக்கப் சொல்லபட்டதே ! இப்போ , இவ்ளோ சிவியரா கொரோனா பரவுது… ஆனா , ‘அண்ணாத்த’ ரஜினியுடன் ‘அண்ணாத்த’ பரபரப்பா படப்பிடிப்பு காணுது !! என்னய்யா நடக்குது .?! அப்போ , எலக்ஷன் நேரம் கட்சி ஆரம்பிக்காம பேன்ஸுங்க கிட்டேயிருந்து, எஸ்’ ஆகறதுக்காகத்தான் ரஜினிக்கு கொரோனா , இல்ல , இல்ல மூச்சுத்திணறல், பிளட் பிரஷர் ….எல்லாமா..?! “அடப்பாவிங்களே …”என புலம்புகிறார் ஒரு அடிமட்ட அப்பாவி ரசிகர் !!!