நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
கொரோனா காலம் ! இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணம் !! மன்சூர் உள்ளிட்ட கோடம்பாக்கம் மவுனம் !!!
கொரோனா காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகம் தொடர்த்து சில பல திடீர் உயிர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் , சமீபமாக தயாரிப்பாளர்கள் பாபுராஜா , மோகன் (நடிகர் அருண் விஜய் மாமனார்) , இயக்குனர்கள் கெளரி சங்கர் (மறைந்த நடிகர் குமரிமுத்துவின் மருமகன்), தாமிரா உள்ளிட்ட இன்னும் சிலரைத் தொடர்ந்து., அடுத்ததாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்தை இன்று, இழந்திருக்கிறது.
சில பத்திரிகைகளில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த் (வயது – 54) , சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர்.
பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர் அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார். கோ , அனேகன் , கவண் உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். வஸந்தின் நேருக்கு நேர் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் சிறந்த ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்
கொரோனாவோ ,வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே தனது காரை ஓட்டிக்கொண்டு தன் வீட்டருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. இன்று (30-04-2021) வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அவர் மாரடைப்பால் மரணித்ததாக அந்த தனியார் மருத்துவமனை சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!
நடிகர் விவேக் மரணித்த போது ‘கொரோனா தடுப்பூசி தான் அவரது மறைவுக்கு காரணம் ஆச்சா , போச்சா… ‘ என்று ஆதாரமில்லாமல் திருவாய் மலர்ந்து மாட்டிக்கொண்டு தவித்த மன்சூரலிகானுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கோர்ட் இரண்டு லட்சம் ரூபாய்க்கு அவர் கொரோனா தடுப்பூசி வாங்கி தந்து முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம்… என உத்தரவிட்டு அதை செயலும் படுத்தியதால் ., கே.வி.ஆனந்த் இறப்பு விஷயத்தில் கோடம்பாக்கத்தில் யாரும் எந்த சர்ச்சையும் கிளப்ப மாட்டார்கள் என நம்புவோம் !!