நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

360

மர்ம நபர்கள் மிரட்டல் ! பயப்படும் ஃபைட் மாஸ்டர் !!
நம்புற மாதிரியா இருக்கு .?!

 

பொதுவாகவே தமிழ் புரடியூசர்ஸ் கவுன்சிலில் ஒரு திரைப்படத்திற்கான டைட்டிலை பதிவு செய்ய வேண்டும் என்றால் ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் ! அதோடு பட டைட்டிலுக்கும் ,பட நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதற்கும் எக்கச்சக்கமாக பணத்தை கொட்டி கொடுக்க வேண்டும். பெரிய புரடியூசர்களுக்கு அது ஒ.கே. ஆனால் , சிறு பட்ஜெட் பட புரடியூசர்களுக்கு ., கம்மி செலவில் தம் படக்கம்பெனியையும் , பட டைட்டிலையும் ஒரு சேர பதிவு செய்து ஒராண்டிற்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள ஆபத்பாந்தவனாக கடந்த பல வருடங்களாக புரடியூசர் கவுன்சில் எனப்படும் தமிழ் படத்தயாரிப்பாளர் சங்கத்திற்கு இணையாக செயல்பட்டு வரும் அமைப்பு ‘புரடியூசர்ஸ் கில்டு’.

ஆனால், இந்த அமைப்பில் சமீபகாலமாக எந்த டைட்டிலைக் கேட்டு போனாலும், அது., ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனும் பதிலே கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் மாஸ்டர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வருவதாக கொஞ்ச காலமாகவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. காரணம் , நீங்கள் விரும்பும் டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் பட நிறுவனத்திடமிருந்து பேசி வாங்கித் தருகிறோம். அதற்கு அவர்களுக்கு இத்தனை ஆயிரங்கள். அத்தனை லட்சங்கள்…. தர வேண்டியிருக்கும்… என கில்டு அலுவலகத்தில் ஜாகுவார் தங்கம் தலைமையில் பணிபுரியும் சம்பந்தப்பட்டவர்கள் ., பதிவு செய்யப்படாத ஒரு டைட்டிலை, யாராலோ., பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி காசு பார்த்து வருவதாக ஒரு தகவல் கொஞ்சம் உரக்கவே கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இது எந்தளவிற்கு உண்மையோ .?! அது, ‘கில்டு’ தலைவர் ஜாகுவார் தங்கத்திற்கே வெளிச்சம்.

இச்சூழலில் , இன்று ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் பட தலைப்புக்காக சில மர்ம நபர்கள் தன்னை மிரட்டி வருவதாக புரடியூசர்ஸ் கில்டு அமைப்பின் தலைவர் ஜாக்குவார் தங்கம்., ஒரு வீடியோ பேசி அதன் லிங்க் கை ‘வீ டிரான்ஸ்பர்’ ஃபைலில் மீடியாக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அட ! என்னதான் நடக்கிறது.?! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜாகுவார் தங்கத்தின் ‘மர்ம நபர்கள் மிரட்டல் …’ வீடியோ கீழே 👇🏻.

” இவரு, யாரையும் மிரட்டாம , டங்குவார அறுத்து அடிச்சு அனுப்பாம இருந்தா போதாதா .?! என்ன ஒரு ஆக்டிங் டா சாமியோவ் …” என இது சம்பந்தமான ஜாகுவாரின் videoLink ஐ ரசித்து பார்த்த ஆபிஸ் பாய் அய்யாவு அவனையும் அறியாமல் மனசுக்குள் புலம்புவதாக நினைத்து வாய்விட்டு புலம்பிச் சென்றான். அட ஆமால்ல., அடிதடிக்கு பேர் போன மாஸ்டருக்கே மிரட்டலா ? எங்கேயோ இடிக்குதே .?!

😀😀😀😎😀😀😀😜