நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

470

திரையுலகில் மற்றுமொரு அதிர்ச்சி !
கொரோனா காலத்தில்., நகைச்சுவைநடிகர் நெல்லை சிவாவும் மரணம் !!

 

மற்றுமொரு அதிர்ச்சி செய்தியாக நகைச்சுவைநடிகர் நெல்லை சிவா இன்று , மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மாரடைப்பால் இயற்கை எய்தியுள்ளார். இறுதி சடங்குகள் நாளை , 12 – 05 – 21 புதன் கிழமை நண்பகலில் நடக்க இருக்கிறது.

நடிகர் நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான பணகுடி – யில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமான அவருக்கு ., அவரது அண்ணன் பிள்ளைகள் இறுதி சடங்குகளை நாளை நடத்த இருக்கிறார்களாம். அவரது ஆன்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போம் !

 

என்னதான் , நெல்லை சிவாவை மாரடைப்பு மரணப்படுக்கையில் தள்ளியதாக செய்திகள் வந்தாலும்., கொரோனா காலத்தில் அடுத்தடுத்து தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரும் மரணமடைந்து வருவது கோடம்பாக்கத்தில் சோகத்துடன் கூடிய பெரும் கிளியையும் ஏற்படுத்தியிருப்பதாக போகி போக்கில் புலம்பியபடி சென்றார் புரடக்ஷன் பாய் புண்ணியகோடி. இருக்காதா பின்னே.?! அலட்சியமா இருக்காமல் எச்சரிக்கையாக இருங்கோ சினிமாக்காரவுகளே !!

😀😀😀😎😀😀😀😜