நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

455

இயக்குனர் ஷங்கரின்., “அன்றைய பாவமும் !’ ‘இன்றைய பதில் மனுவும்.!!”

 

‘இந்தியன் 2’ பட தாமதத்துக்கு படத்தை தயாரிக்கும் ‘லைகா’ நிறுவனமே காரணம் ! என இயக்குனர் ஷங்கர் ., நீதிமன்றத்தில் ‘லைகா’ நிறுவனம் தன் மீது கொடுத்துள்ள புகார் மனுவுக்கு அளித்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளார் !!

மேலும் ,அவர் பட தாமத்திற்கு காரணமாக கூறியவற்றின் விவரங்கள் வருமாறு :-

கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு… போன்றவையும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட , தாமதமாக காரணங்களாகும் . எனக் கூறியுள்ளார்.

மேலும் ., படத்தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. இப் படத்தை தயாரிக்கும் ‘லைகா’ நிறுவனமே காரணம் . எனவே ,லைகா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளதோடு… படத்தின் பட்ஜெட்டை ரூ 270 கோடியில் இருந்து , தான் ‘லைகா’ கேட்டுக்கொண்டதால் ரூ 250 கோடியாக குறைத்து ஒத்துழைப்பு நல்கினேன்.

ஆனால் , படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தையும் லைகா ஏற்படுத்தியது. அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்குவது … உள்ளிட்ட எல்லாவற்றிலும் ‘லைகா’ தாமதமப்படுத்தியது என்றும் கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரிய ‘லைகா’ நிறுவன வழக்கில் ஷங்கரின் பதில் மனுதான் மேற்கண்டது. இந்த பதில் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ., இந்த வழக்கை ஜூன் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

 

இதே இயக்குனர் ஷங்கரின் எஸ்’ பிக்சர்ஸ் தயாரிப்பில்., இம்சை அரசன் 23ம் புலிகேசியின் பகுதி – 2 ஆக, உருவாக இருந்த படத்தில் வெறும் ஆறரைக்கோடி பஞ்சாயத்துக்காக வைகப்புயல் வடிவேலுவை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து ., தொடர்ந்து நடிக்க விடாமலும் , இயக்குனர் சிம்புதேவனை (தன் சிஷ்யர் என்றும் பாராமல்…) ., அடுத்தடுத்து படங்களை இயக்கவிடாமலும்… செய்த ஷங்கரை ., 250 கோடி போட்டு படமெடுக்கும் ‘லைகா’ மட்டும் லேசுல விடணும்னா எப்புடி .?! எனக்கேட்கிறார் ஆபிஸ் பாய் அய்யாவு ! அவர் கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை. ஹீ.. ஹீ … !!

😀😀😀😎😀😀😀😜