நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

524

‘லைகா’ புரொடக்ஷன்சின் தயாளம் !! தாராளம் !!!

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், ‘லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினரும் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் உள்ளார்.

 

வெளிநாட்டு கம்பெனிங்க வெளிநாட்டு கம்பெனிங்க தான்… நடிகர் சிவக்குமார் ஃபேமிலி தவிர்த்து நம்ம ஊர் நடிகைங்க …. நடிகருங்க , சினிமா கம்பெனிங்க… எல்லாம் 5 லட்சம் , 10 லட்சம் அதிகபட்சமா 25 லட்சமே முதல்வரின் நிவாரண நிதிக்கு அவரு கேட்டதால ., ஓடிப்போய் கொடுக்க , லைகா 2 கோடி கொடுத்திருப்பது., பலரது புருவத்தை உயர்த்த செய்துள்ளது. கூடவே , முதல்வர் நிவாரண நிதிக்கு ., லைகா , இவ்வளவு பெரிய அமெளண்ட் கொடுக்க ‘இந்தியன்-2 இயக்குனர் பஞ்சாயத்து….’ உள்ளிட்ட வேறு எந்த காரணமும் கிடையாதல்லவா.?! எனும் கேள்வியையும் கோவிவுட்டில் எழுப்பியுள்ளது. அட போங்கப்பா … கொடுக்காவிட்டாலும் குத்தம். அள்ளிக்கொடுத்தாலும் குறையும் , குத்தமுமா .?! வெறும் வாயை மெல்ல… வேறு விஷயம் ஏதும் பாருங்க… இதுல ‘லைகா’ வை பாராட்ட பாருங்கப்பா !!
😳

 

😀😀😀😳😇😳😃😃😃

😳