நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
இயக்குனர் அண்ணன் லிங்குசாமி இயக்கும் புதிய ‘தமிழ்/தெலுங்கு’ பை லாங்வேஜ் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் தம்பி சுபாஷ் சந்திர போஸ் !
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய ‘தமிழ்/தெலுங்கு’ பை லாங்வேஜ் படத்தை இயக்குகிறார்.
நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
‘ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்’ சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP, சண்டைப்பயிற்சி – அன்பறிவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, வசனம் – சாய் மாதவ் புரா (தெலுங்கு) பிருந்தா சாரதி (தமிழ்) .
பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘மாஸ்டர் பீஸ்’ ( MasterPiece) நிறுவனம் பெற்றுள்ளது.
” அண்ணன் என்னடா தம்பி என்னடா… அவசரமான உலகத்துல…” ன்னு அந்த காலத்திலேயே பாடி வச்சுட்டு போனங்க… அது படிதான் பெரும்பாலான அண்ணன் தம்பிகளும் இந்த உலகத்துல வாழ்ந்துட்டு இருக்காங்க (பெரும்பாலும் கல்யாணம் காட்சிக்கு அப்புறம் )… என்றாலும் , ‘ஆனந்தம் ‘ ன்னு அற்புதமான படைப்பை அண்ணன் – தம்பி பாச பிணைப்பை… தமிழ் திரையுலகிற்கு தந்த
இயக்குனர் அண்ணன் லிங்குசாமி ., வேறு புரடியூசர் தயாரிப்பில தான் இயக்கும் புதிய ‘தமிழ்/தெலுங்கு’ பை லாங்வேஜ் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைக்க தன் தயாரிப்பாளர் தம்பி சுபாஷ் சந்திர போஸ் வரவேண்டும்… என எண்ணினாரோ.?! அல்லது , இந்த புதுப்பட தயாரிப்பாளர் ‘ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்’ ஸ்ரீனிவாசா சித்தூரி லிங்குவின் தம்பு சுபாஷ் தான் கிளாப் அடிக்க வேண்டுமென விரும்பினாரோ ., லிங்குவின் முதல் படமான ‘ஆனந்தம்’ படம் அளவிற்கு இந்த இரு மொழிப்படமும் வெற்றி பெற வாழ்த்துவோம்… என சில, பல கோலிவுட் பட்சிகள் கோரஸாக வாழ்த்தியது அந்த ‘திருப்பதி பிரதர்ஸை’ சேர்ந்திருக்குமா? தெரியவில்லை..!
அவர்களின் லிங்கு-சுபாஷ் ஒற்றுமை பற்றிய சிலேகிப்பு நம் செவிகளை சேர்ந்ததால் இந்த நியூஸ்!
😀😀😀😂😂😀😀😀