நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
மகன் பிறந்த மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி !!
“18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, என் மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார் !” என தனக்கு ஆண் மகன் பிறந்த மகிழ்ச்சியில் தன் மறைந்த தந்தை தனக்கு திரும்ப கிடைத்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் தனது டுவிட்டர் பக்கத்தில் …
இது பற்றிய விவரம் வருமாறு :-
ஏற்கனவே ஆராதனா எனும் பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
நேற்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.
தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “18 வருடங்களுக்குப் பிறகு., இன்று ,என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க., தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என்று பதிவு செய்து இருக்கிறார்.
“கல்யாண மண்டபத்துக்கு வரி கட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற உச்ச நட்சத்திரமும் , லண்டன்ல இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விதிக்ககூடாதுன்னு கோர்ட்டுக்கு போற அரசியல் ஆசை கொண்ட இளம் தளபதியும் இருக்கிற நம்ம கோலிவுட்டுல ‘தல’ நடிகரு மாதிரி சத்தமில்லாத தயாள குணத்தோட இருக்கிற சில நடிகர்கள்ல சிவகார்த்தியும் ஒருத்தர் ! அந்த நல்ல குணத்தாலேயே அவரது தவப்புதல்வன்., தந்தையை மிஞ்சும் தனயனாக, சகலகலாவல்லவனாக., எதிர்காலத்தில் சிறக்க வாழ்த்துகளை சொல்வோம் ! ” என விஷயம் கேள்விபட்டு நடிகர் சிவகார்த்திகேயனையும் அவர் மகனையும் ஒருசேர மனதார வாழ்த்தி சென்றார் புரடக்ஷன் (மேனேஜர்) புண்ணியகோடி ! அட, ஆமால்ல ..!
😀😀😀😀😀😀