நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

673

தமிழ் பட அதிபரும், பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான எஸ் பி சௌத்ரி பிறந்தநாள் !

‘சூப்பர் குட்’ ஆர்.பி. செளத்ரியையும் தாண்டி தயாரிப்புதுறையில் சாதிக்க திரை பிரபலங்கள் வாழ்த்து !!

 

A1, டகால்டி வெற்றி படங்களின் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரிக்கு இன்று பிறந்தநாள்.

தற்போது செளத்ரி,தனது ’18 ரீல்ஸ்’ பட நிறுவனம் சார்பாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்க ‘டிரைவர் ஜமுனா’ என்ற படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில், பிரமண்டமாக தயாரித்து வருகிறார். இன்று, பிறந்தநாள் கொண்டாடும் இவர், ‘ சூப்பர் குட் பிலிம்ஸ் ‘ ஆர்.பி.செளத்ரி மாதிரி பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும்… என்றும், நீடூழி வாழ்ந்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் … என்றும் திரை பிரபலங்களான இயக்குனர் சசிகுமார், நடிகர் சந்தானம், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, ஆடுகளம் நரேன், ‘லொள்ளு சபா’ மாறன், சுவாமி நாதன், தங்கதுரை, மனோகர், இயக்குனர் ராம் பாலா, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, அம்மா கிரியேசன்ஸ் சிவா, பெப்சி சிவா…. உள்ளிட்ட இன்னும் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் படத் தயாரிப்பாளர் வாழ்ந்தால் தானே தமிழ் திரையுலகம் தழைத்தோங்கும் !” என மேற்படி தமிழ் திரையுலகினர் நேரிலும் தொலைபேசியிலும் ‘சூப்பர் குட் ‘ ஆர்.பி.செளத்ரியை போன்று எஸ்.பி. செளத்ரியும் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என தங்காது வாழ்த்துகளை பதிவு செய்துவருவதை கண்ட மாஜி லைட்மேன் ‘குவாட்டர்’ கோவிந்தன் ., ஒரு படி மேலேபோய் , தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரியும் ‘சூப்பர் குட்’ ஆர்.பி. சௌத்ரி போல் இரண்டு பையன்களை பெற்று, வளர்த்து தமிழ் சினிமாவுக்கு ஹீரோக்களாக தரவேண்டும்…. என ஃபுல் மப்பில், கோடம்பாக்க வீதிகளில் வாழ்த்தி தள்ளியபடியே சென்றார். குடிகாரன் பொய் சொல்ல மாட்டான் என்பதற்கேற்ப கோவிந்தனின் வாக்கும் பலிதமாகி., எஸ்.பி.சௌத்ரியும், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக நாமும்., அட்வான்ஸாக , அவரது பிறந்தநாளில் வாழ்த்துவோம் !!

😳😀😀😀😳😀😀😀😳

😳