நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

667

காணாமல் போனது, ‘இது நம்ம ஆளு’ ஷோபனாவின் விலையுர்ந்த செல்போன் ! காரணம் யார் .?!!

நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ‘ இது நம்ம ஆளு’ ஷோபனாவின் விலையுர்ந்த செல்போன் அவரது வீட்டிலேயே மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள குல்மகர் அவென்யூவில் நடிகை ஷோபனாவின் வீடு உள்ளது.

வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த செல்போன் திருடு போனதாகவும் , விலையுர்ந்த செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகவும் ‘இது நம்ம ஆளு’ ஷோபனா தரப்பில் ., போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எப்படியும் வீட்டை சுத்தம் செய்தவர்களையும் வீட்டுவேலையாட்களையும் விட்டு வைக்காமல் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு போய் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கும். அதன்பின் போனும் கிடைக்கும். அதற்குள் ஃபோனில் இருந்து எதுவும் பர்ஸ்னல் டேட்டாக்கள் திருடப்பட்டுவிடக்கூடாதே… என்பது தான் இப்போதைக்கு ‘இது நம்ம ஆளு ‘ நடிகையின் பெருங்கவலையாக இருக்கும் !

‘பர்ஸ்னல் டேட்டா’க்கள் என்றவுடன் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலையாதீர்கள் ! வங்கி பரிவர்த்தனைகள், பர்ஸ்னல் மெஸேஜுகள்… உள்ளிட்ட இன்னும் பிற விவரங்களைத்தான் சொல்கிறோம். மற்றபடி , நீங்கள் நினைப்பது மாதிரி வேற எதுவுமில்லே !!

😳😀😀😀😳😀😀😀😳

😳