நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

718

பறவைகள் பாதுகாவலராய் வாழ்ந்த , நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் மரணம் !!

2020 ஜனவரியில் ., நடிகை சித்ரா கடைசியாக நடித்த “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்த சித்ராவின் தோற்றம்

முன்னாள் தமிழ் சினிமா கதாநாயகியும்,, இதயம் நல்லெண்ணய் விளம்பர படத்தில் நடிகை ஜோதிகாவிற்கு முன் வெகு ஜோராக நடித்து, பிரபலமானவருமான நடிகை நல்லெண்ணெய் சித்ரா சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார் .

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” இந்தப்படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். 2020 ஜனவரி 3’ம் தேதி இந்தப்படம் வெளியானது . அதுவே அவர் நடித்து வெளிவந்த கடைசி படமாகும்.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே பெண். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். அப்பெண் குழந்தையை வளப்பதற்காகவே சித்ரா நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்து வந்தார் .

சித்ராவின் கணவர், சில மாதங்களுக்கு முன்., பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கணவரை பராமரித்து வந்த நிலையில் இவர் காலமானது மிகுந்த துயரம் !

நேற்று, இரவு 12′ மணிக்கு மாரடைப்பால் தன் சென்னை, சாலிகிராமம் இல்லத்திலேயே காலமான நடிகை சித்ராவுக்கு வயது 56.

கணவர் மற்றும் மகளுடன் சித்ரா !

இன்று மாலை 5′ மணிக்கு சித்ராவின் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது !

தினம் தன் வீட்டின் மொட்டை மாடியில் ஏராளமான பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் தானிய உணவுகளை அளிக்கக்கூடிய பறவைகள் பாதுகாவலர் சித்ரா…என்பதும் , ஏராளமான காக்கைகள் இவர் வீட்டின் மொட்டை மாடியில் நேரம் தவறாமல் வந்து, உணவுக்காக கரையும்., இதற்காகவே வெளியூர் பயணத்தையும் படப்பிடிப்புகளையும் தவிர்த்து வந்தார் நல்லெண்ணய் சித்ரா என்பதும் இவரைப்பற்றி பெரிதாக யாரும் அறிந்திராத நல்லவிதமான தகவலாகும் !

 

“கொரோனா காலத்தில் , பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் , பணிரெண்டாம் வகுப்பு முடித்த மகள் , இவர் போடும் இறையை நம்பியிருந்த ஏராளமான பறவைகள் எல்லாவற்றையும் அம்போ என விட்டு விட்டு அகால மரணமடைந்து விட்டார் சித்ரா. இனியாவது , இறைவன் கொரோனா கால மாரடைப்பு மரணங்களை தவிர்த்து பலரை தவிக்க விடாதிருக்கட்டும்!” என நம் காதுபட , பாவம் நல்லெண்ணத்தில்., புலம்பியபடியே சென்றனர் நடிகை நல்லெண்ணய் சித்ரா ஏரியாவாசிகள் சிலர். இனியாவது , கடவுள் கருணை புரியட்டும் !!

😳