நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
வாழ்க ‘ருத்ரதாண்டவம்’ ! வளர்க ‘ஜெய் பீம்’!!
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் மோஷன் போஸ்டர் ., ரசிகர்களின். ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது !!
நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம், கண் கவரும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் வெளியாகிறது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளனர்.அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இதில் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதே.
இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப்படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைதயாரிப்பை கவனிக்கிறார்.
நவம்பர் 2ஆம் தேதி, , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இதில் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதும் அவரது வக்கில் கெட்-அப் பும் , பட டைட்டிலும் அண்ணல் அம்பேத்கரை ஞாபகப்படுத்தும் வகையில் இருப்பதும் தான். இதை பார்க்கும் போது ., மோகன்.ஜி.யின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு விஷயம் தான் ஞாபகம் வருகிறது. அது, ‘அம்பேத்கார் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான தலைவர் என்பதுபோல் சித்தரிக்கப்படுகிறார் . காந்தியடிகள் மாதிரி அனைத்து சமுதாயத்திற்குமான தலைவராக அனைத்து ஜாதியினராலும், அனைத்து இந்தியராலும் டாக்டர் அம்பேத்கார் கொண்டாடபடவேண்டும். அவர், பட்டியல் இனத்தவருக்கு மட்டும் சட்டம் இயற்றவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் அனைத்து இந்தியருக்கும் சட்டம் இயற்றியவர் அவர் தான்… என அம்பேத்கரை கொண்டாட சொல்லியிருந்தது ‘ருத்ரதாண்டவம்’ திரைப்படம் . அதை செய்ய முயன்றிருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்…என்று இப்பட பிரஸ் ரிலீஸைப் பார்த்து பத்திரிகையாளர்கள் சிலர், பேசிக்கொண்டது நம் காதிலும் விழுந்தது. நமக்கும் அப்படியே தோன்றுகிறது. வாழ்க ‘ருத்ரதாண்டவம்’ ! வளர்க ‘ஜெய் பீம்’!!