நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

798

டைவர்ஸுக்கு., பிறகு ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ படத்தில் ‘ரொமான்டிக்’ சமந்தா .?! எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் !!

‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ ( Dream warrior Pictures ) நிறுவனம், தமிழ் திரையுலகில் மாறுபட்ட தரமான படைப்புகளை வழங்கி வரும் பெரும் நிறுவனம். ஜோக்கர், அருவி என மாறுபட்ட கதையம்சம் கொண்ட படைப்புகள் ஒரு புறம், காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம் – 1 , NGK என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் படங்கள் மறுபுறம்., என பல தரமான படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டு பெற்று வருவது நாம் அறிந்ததே.

‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரொமான்டிக் ஃபேண்டஸி வகையில் உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். இவர் ‘ஒருநாள்கூத்து’ இயக்குனர் நெல்சன் வெங்கடேசனிடமும், ‘கண்ணும்கண்ணும்கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடமும் இணை இயக்குநராக பணியாற்றியவர். தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதா பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாம் .

 

‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ பேனரில் , சமந்தா நடிப்பது இதுவே முதல் முறை என்பதோடு டைவர்ஸுக்கு., பிறகு சமந்தா நடிக்கும் முதல் தமிழ் படம் அதுவும் ‘ரொமான்டிக்’ படம் ஃபேன்டசி படம் என்பதும் ரசிகர்களிடம் இப்பொழுதே கிளுகிளுப்பை கூட்டிவிட்டுள்ளதாகவும், எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாகவும் கூவிச்சென்றது ஒரு கோலிவுட் குருவி ! இருக்காதா பின்னே !!