நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
கொரோனா தொற்றால் தடைபட்டிருந்த ‘நினைவோ ஒரு பறவை’ மீண்டும் படப்பிடிப்பு காண்கிறது !
தமன் இசையில், யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர்
நடிக்கின்றனர் !!
‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது…
இதனைப் பற்றி அந்தப்படத்தயாரிப்பு நிறுவனம் … “எங்களது ‘நினைவோ ஒரு பறவை’ படத்திலிருந்து மீனா மினிக்கி…. மற்றும் இறகி இறகி…. , கனவுல உசுர….. என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால்., அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடி யில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.
அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம் அது மிகவும் மன வேதனை அளித்தது. ஒருவழியாக அந்த துக்கங்களில் இருந்து மீண்டு , மீண்டும்
தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம் .இப்படத்தை
‘மைண்ட் டிராமா ‘ மற்றும் ‘ஒயிட்டக் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கிறதுஇயக்குனர் ரிதுன் இயக்கவுள்ள இதில்
யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர்., சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார்,தமன் இசை அமைக்கும் இப்படம் 2022
திரைக்கு வர உள்ளதாம்.
முன்னல்லாம் சினிமாவுல வாய்ப்பு வாங்க சினிமா கனவோட இருக்கிற இளசுங்க ., கோடம்பாக்கம் வந்து , தன் ஃபோட்டோ ஆல்பத்தோட படத்தயாரிப்பு கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்குவாங்க வாய்ப்புத்தேடி .
இப்போ , யூடியூப்புல பேமஸா இருக்கிற பொடிசுங்களைக் கூடத்தேடி இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் போறாங்க. இது தான் இன்னிக்கி டிரெண்ட் . அதேயேத்தான் ‘ நினைவோ ஒரு பறவை’ படக்குழுவும் ஃபாலோ பண்ணி ரிதுன் இயக்கத்துல இதில் யூடியூப் புகழ் ஹரிபாஸ்கரை சிறுவயது கதாநாயகனாக பிடிச்சி போட்டிருக்காங்க போல… என சிலர் கோலிவுட்டில் பேசிகொள்கின்றனர். அதுல, தப்பொன்றும் இல்லையே… என்பதே நம் வாதமும் !