நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

973

 சந்தானத்திற்கும் அரசியல் ஆசை வந்து விட்டதோ .?!

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நடிகர் சந்தானம் ரசிகர் நற்பணி மன்றத்தினர் உதவி வருகின்றனர் !

கொரோனா காலத்திலும் சரி , புயல் மழை வெள்ள காலங்களிலும் சரி ., நடிகர் சந்தானம் ரசிகர் நற்பணி மன்றத்தினர் ., பெரிதாக விளம்பரம் தேடாமல் சத்தமின்றி தங்களால் இயன்றதை பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் , சென்னையில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,நடிகர் சந்தானம் ரசிகர் நற்பணி மன்றத்தினர் ., தங்களால் இயன்ற அளவு அரிசி மளிகை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

இன்று, பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியில் நடிகர் சந்தானம் ரசிகர் நற்பணி மன்ற அகில இந்திய தலைவர் குமாரவேல் தலைமையில் அம்மன்றத்தை சேர்ந்த ஒண்டித்தோப்பு சுதாகர் , ரமேஷ் , நாகராஜ் , ராகவேல்… உள்ளிட்டோர் நடிகர் சந்தானம் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிய காட்சிகளை யதேச்சையாக பார்த்ததும் அதை ,சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ., அவர்களிடம் கேட்டோம் …

“என்ன நடிகர் சந்தானத்திற்கும் அரசியலில் குதிக்கும் ஆசை ஏதும் வந்து விட்டதா ? என்ன .?! ” எனக் கேட்டதும்தான் தாமதம்.

” மனிதாபிமானத்தோட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வர்றோம் சார். இதைப்போய் அரசியல் , அரிசியல்… அப்படின்னு சொன்னா ? எப்படி .?! என லேசாக புன்னகைத்தபடி பதிலளித்தவர்கள் தொடர்ந்து ., இது அண்ணனுக்கே (சந்தானம்) இன்னும் தெரியாது …என ஒரே போடாக போட்டது தான் ஹைலைட் !

நமக்கு நடிகர்கள்., நற்பணியில் ஈடுபடுகிறார்கள்… என்றாலே . ,அதுவும் அரிசி பருப்பு கொடுத்து ‘அரிசி’யில் … இறங்குகிறார்கள்… என்றால் , அடுத்து அது அரசியலில் அடியெடுத்து வைக்கும் முகமாகவே இருக்கும் . என்பதுதான் எழுதப்படாத சட்டம் ம், பார்க்கலாம் என நம் காதுபடவே பேசி சென்றனர் சந்தானம் நற்பணி மன்றத்தினரின் இந்த நிவாரண உதவியை பெற்றுச் சென்ற விவரமான இருவர். அதையும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே !

 

😀😀😀😀😎😀😀😀😀