நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

962

விஜய் சொல்லிட்டார்னு யாரும் திருந்தவா போறாங்க .?!

– ‘புளூ சட்டை’ மாறன் பட இசை விழாவில் நடிகர் ராதாரவி கிண்டல் பேச்சு !!

‘ஆன்டி இண்டியன்’ பட இசை விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது.,

“இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல

இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. நிஜம் தான்.. அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார்.. நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க.. திட்டத்தான் செய்வாங்க.. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.. அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.. அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.

ஒரு படத்தை படமா பாருங்க.. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.. விஜய் ‘பைரவா’ ன்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க..

நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.

படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.

 

இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காக இந்தப்பட இயக்குனர் புளு சட்டை மாறனை 3 – 4 முறை திரும்ப திரும்ப வரவழைத்து (அலைய விட்டு ) கதை கேட்டு அப்புறம் ஒத்துக்கிட்டேன். ஏன்னா , இந்தப்படத்துல சிஎம்-ஆ நான் நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல … என்ற புலம்பல் எல்லாம் ok ராதாரவி சார். நிஜத்துல நீங்களும் சி.எம் ஆசையில தான் அடிக்கடி கட்சி இருக்கீங்களாமே அது ,உண்மையா .?! என நம் காது படவே முணுமுணுத்தனர் … விழாவிற்கு வந்திருந்தோரில் ஒரு சிலர். நல்ல கேள்விதான் என நமக்கும் பட்டது. ஆனால், ராதாரவி பதில் சொல்ல வேண்டுமே.

 

😀😀😀😀😎😀😀😀😀