நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

845

ஜனவரி 26- குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் விஷாலின் “வீரமே வாகை சூடும்” !

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.

இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு இப்படம் அனைத்து கட்ட பணிகளும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

 

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார்.
து.ப. சரவணன் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார். இப்படி திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் வல்லுநர்களும் பங்கேற்க உருவாகி வருகிறது விஷாலின் ‘ வாகை சூடம்!’

 

நடிக்கும் படங்களில் … மற்ற நாயகர்களைக்காட்டிலும் ஜாஸ்தி., நாட்டுப்பற்று !, கூடவே , ஜனவரி – 26 குடியரசு தினம் , ஆகஸ்ட் – 15 சுதந்திர தினம்… என தங்கள் படங்களின் வெளியீடு என தங்கள் குருநாதர் ஆக்ஷன் கிங் அர்ஜுனையும், அவரையும் தாண்டிய தேசப்பற்று , தீவிரவாதிகளை விரட்டிப் பிடித்து அழித்தல் … படங்களுக்கு பேர் போன புரட்சி கலைஞர் விஜயகாந்தையும் பீட் பண்ணிடுவிங்க போலயே… விஷால் ! எனிவே , உங்க தேசபக்திக்கு ஒரு ராயல் சல்யூட் !!

😀😀😀😀😎😀😀😀😀