நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
‘மாநாடு’ ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு ! காரணம் இதுதானோ .?!
”V’ House” பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் ‘மாநாடு’.
STR @ சிம்பு நாயகனாக நடித்துள்ளார்.யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் நாளை நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார் அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
அவரின் ட்விட்டர் பக்கத்தில்..
“நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்திருந்தேன்.
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.”
என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர்… என்ற அரசாணையை தமிழக அரசு மிகச்சமீபமாக வெளியிட்டது. உடனடியாக அதற்கு எதிர்ப்பு குரல்களும் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களிடமிருந்து கிளம்பின. ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி தமிழக அரசுக்கு ஒரு பெருங்கடிதமே எழுதினார். அதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.
இந்நிலையில்., திரையரங்குகளில் ‘மாநாடு’ படத்திற்கான முன்பதிவில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காரணத்தால் தான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எது , நிஜமோ .?!
மாட்டாரே ! அதனாலதான் கேட்காம விட்டிருப்பார் போல …!
😀😀😀😀😎😀😀😀😀