நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

907

ஒரு பெண் இரு கணவரா .?!

‘மீண்டும்’ படத்திற்கு மாதர் சங்கங்கள் எதிர்ப்பு ! எதிர்பார்ப்பை கூட்டியிருக்கு..!

‘மீண்டும்’ படத்தில் கதாநாயகிக்கு இரண்டு கணவர்கள் இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதை அறிந்த மாதர் சங்க அமைப்புகள் சில, ‘மீண்டும்’ பட இயக்குநர் சரவண சுப்பையாவுக்கும் , தயாரிப்பாளர் மணிகண்டனுக்கும் அது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம். இது சமீபமாக திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

இந்தப்படத்தில் கதிரவன், அனகா, சரவண சுப்பையா , அனுராதா , துரை சுதாகர் , சபீதா ரெட்டி , ‘யார்’ கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி , சுப்ரமணிய சிவா, தர்ஷினி, இந்துமதி மணிகண்டன், கேபிள்சங்கர்… உள்ளிட்டவர்களுடன் மாஸ்டர் பிரணவ்ராயன் எனும் குழந்தை நட்சத்திரமும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.

ஹீரோ சினிமாஸ் பேனரில் சி.மணிகண்டன் தயாரிப்பில்., ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நரேன் பாலகுமார் இசையிலும் ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது ‘மீண்டும்’.

பாடலின் முக்கிய அம்சமாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான ‘கெமிஸ்ட்ரி’ உள்ளது. ரசிகர்களை இது மிகவும் கவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஏனென்றால், இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘தரையோடு தூரிகை’ பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகிறது. யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

 

இதுமாதிரி, மாதர் சங்க எதிர்ப்புகளால் ‘மீண்டும் ‘ படத்திற்கு எதிர்ப்பைத்தாண்டி கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது மட்டும் நிதர்சனம். நிச்சயம் ‘மீண்டும்’ ரசிகர்களை மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டும் இரண்டு பொண்டாட்டிக்காரன் கதையம்சம் உடைய படம் என்பது மட்டும் புரிகிறது. தெரிகிறது., என நமக்கு இந்த செய்தி கேள்விபட்டதும் போன் போட்டு தன் கருத்தை சொன்னார் புரடக்ஷன் புண்ணியக் கோடி. அட அப்படியும் கூட ‘மீண்டும்’ ஓடும் தியேட்டரில் மீண்டும், மீண்டும் கூட்டம் சேர வாய்பிருக்கு அப்போய் !

😀😀😀😀😎😀😀😀😀