நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

1,189
பட அதிபர் எஸ்.ஆர்.பிரபு திறந்து வைத்த “Madras Pongal” !!

தமிழகத்தின் தலைநகரமான நம்ம சென்னையில் உணவகங்களுக்கு பஞ்சம் கிடையாது.

அதேநேரம் , உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் தரமான ஆரோக்கியமான உணவுக்கு இங்கு பஞ்சம் உண்டென்றால் மிகையல்ல..!

ஒரு நாள் , ஒரு வேளை., ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் நிறைய உணவகங்கள் சென்னையில் இருக்கின்றன.

ஆனால் சமீபமாக மிகவும் எளிய முறையில் அதேநேரம் சுகாதாரம் சுத்தத்திற்கு முக்கியத்துவம் தரும்படியாக “Madras Pongal” எனும் புதிய உணவகம் சென்னை அடையாறு பகுதியில் தொடக்கவிழா கண்டுள்ளது. இதை பிரபல படத் தயாரிப்பாளரும் நடிகர் சூர்யா & கார்த்தியின் உறவினருமான தயாரிப்பாளர் S.R.பிரபு ., திறந்து வைத்திருக்கிறார்.


“Madras Pongal” உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டிகளும், மதியம்
வெரைட்டி ரைஸ் சாப்பாட்டில் அனைத்து வகைகளும் இங்கு கிடைக்கும்.

மாலையும்,இரவும் அனைத்து விதமான
டிபன் & ஸ்நாக்ஸ் வகைகள் இங்கு கிடைக்கும்.

இங்கு , தயார் செய்யும் அனைத்து உணவு வகைகளும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான வகையிலும் தயார் செய்யப்படுகின்றது.

மேலும் சமையல் கலையில் கைதேர்ந்த சீனியர்
‘செஃப்’ களை வைத்து விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுவது இந்த
” மெட்ராஸ் பொங்கல் ” ஹோட்டலின் தனிச்சிறப்பு.

தன் நெருங்கிய நண்பரும் ‘மெட்ராஸ் பொங்கல்’ ஹோட்டலின் நிர்வாக இயக்குநருமான JP க்காக இந்த ஹோட்டலை ரிப்பன் கட் செய்து , குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்துவிட்டு., காலை சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்த சினிமா
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு …

“இங்கு., இட்லி ,வடை, பொங்கல்,
சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டேன் நாவிற்கு நல்ல ருசியாக இருந்தது.
பிறகு மெது வடை சட்னி ,சாம்பாருடன் கலந்து சாப்பிட்டேன் குறிப்பாக சாம்பாரின் நெய்பருப்பு வாசம், நாவிற்கு ரொம்ப சுவையாகவும் நாசிக்கு இதமாகவும் இருந்தது.

.
இந்த சுவையை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என என் நண்பரை கேட்டுக் கொண்டேன். மேலும் , உணவு வகைகள் மிகவும் தரமான முறையில் உள்ளது. உணவு தயாரிக்கும் இடம் கூட மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறது.
‘மெட்ராஸ் பொங்கல்’ குழுமத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் ” இவ்வாறு கூறினார்.

அவரைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் பொங்கல்’ குழுமத்தின் இயக்குநர் JP பேசுகையில்….

“எங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சுவையில் தரமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்குவதே எங்களின் லட்சியம் .
மேலும் இது எங்களுடைய முதல் படிதான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் மேலான ஆதரவில் இந்த படிகள் நிச்சயமாக உயரும் …. என நம்புகிறோம். வாருங்கள் வரவேற்கிறோம்..! தரமான உணவு அருந்துங்கள் நிறைவாக வாழ்த்தி செல்லுங்கள் …” எனக் கூறி திறப்பு விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நிர்வாக இயக்குனர் JP நன்றி தெரிவித்தார்.

வருங்காலத்தில் வாடிக்கையாளர்களே இவர்களின் முழு முகவரியாக மாற போகின்ற
இவர்களது ஹோட்டல் முகவரி:

“Madras Pongal”
No:32,3rd cross main road,
Kasturi bhai Nagar,
Adyar
Land Mark – (opp) Adyar nalli silks.

 

வாயேன் ஒரு எட்டு , “மெட்ராஸ் பொங்கல்” ஹோட்டலுக்கு போயிட்டு வந்துடுவோம்… என இந்த செய்தியையும், அந்த ஹோட்டலின் முகவரியையும் பிரஸ் ரிலீஸில் படித்து முடித்த நம் ஆபிஸ் பாய் அய்யாவும் , அவரது வுட்பி அமுதாவும் இந்நேரம், மெட்ராஸ் பொங்கல் ஹோட்டலில் ., பதார்த்தங்களை …ஒரு கை பார்த்திருப்பார்கள் என நம்பலாம்.

 

😎😀😀😀😂😀😀😀😎