நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
“நாசர் தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு , பாரம்பரிய ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் சால்வை !!”
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல்., .சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில் அதன் ஓட்டு எண்ணிக்கை மட்டும் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததையடுத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
அதன்படி, சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில்.,
நடிகர் சங்கத்தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது . இறுதியில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, முழுவதுமாக வெற்றி பெற்று சென்னை தி.நகரில் உள்ள சபரி இன் ஹோட்டலில் செயற்குழு கூட்டம் நடத்தியது.அங்கு, முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்.,
வெற்றி பெற்ற நடிகர் சங்க புதிய நிர்வாகிகளான தலைவர் நாசர் , செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன், மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட நம், “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் அதன் தலைவர் D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S.கார்த்திகேயன் , பொருளாளர் A. மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத் தலைவர் E. சுகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
“சால்வை , பாராட்டெல்லாம் இருக்கட்டும்., நடிகர் நடிகைகளைப் பற்றி கண்டபடி , கிசுகிசுக்கள் எழுதாதீர்கள்…அது போதும்!’ என நடிகர்கள், நிர்வாகிகள் யாரும் சினிமா பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை ஏதும் வைக்கலியே.?!” என்றபடி, புன்முறுவல் பூத்தார் அந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர்!!
😀😀😀😳😎😳😀😀