நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

959

“இப்படத்தை தயவு செய்து இவர்களெல்லாம் பார்க்க வேண்டாம் !”

– யாரையெல்லாம்., சொல்கிறார் ‘அந்த நாள்’ ஆர்யன் ஷ்யாம் .?!!

ஆர்யன் ஷ்யாம் கதாநாயகராக நடித்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அந்த நாள்’.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் எனும் பெருமைக்குரிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவன அதிபர் ஏவிஎம் சரவணனின் பேத்தி அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர் தான் இந்த ‘அந்த நாள்’ ஆர்யன் ஷ்யாம்.

ஆர்யன் ஷ்யாம் , தான் ‘’அந்த நாள்’ திரைப்படம் படத்தில் நடித்து, தயாரித்துள்ளது குறித்தும்., இயக்குனர் மிஷ்கின் உடன் தனக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட உரசல் குறித்தும் இவ்வாறு கூறுகிறார்.

எவ்வாறு ..?

“நானே கதை வசனம் எழுதி தயாரித்து நடித்துள்ள படம் ’அந்த நாள்’. இப்படம் நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு படத்தை முடித்து அனுப்பிவைத்தோம். ஆனால் நரபலி, பில்லி சூனியம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர மறுப்பு கூறினர். நரபலி இந்திய அரசியலமைப்பால் தடை செய்யப்பட்டதால் இப்படத்திற்கு சென்சார் தர மறுத்துவிட்டனர். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு நடிகை கௌதமி பார்த்துவிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். பல்வேறு கட்டுகளுடன் படத்தை ஏ சான்றிதழுடன் வெளியிட அனுமதி அளித்தார்.

மேலும், மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அப்படத்தில் நடிப்பதற்காக, நான் அளித்திருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை இயக்குனர் மிஷ்கின், தற்போது திருப்பி அளித்துவிட்டார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் அவர் படத்தில் நடிப்பேன். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்… ’எனது ‘அந்த நாள்’ நிச்சயமாக ‘சைக்கோ’ வை விட சிறந்த படமாக இருக்கும்’.

’அந்தநாள்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் விஷயம் .

ஏவிஎம் நிறுவனம் பாரம்பரியமிக்கது. அதனால் நரபலி தொடர்பான இப்படம் ஏவிஎம் பெயரில் வெளியாகாது. எமது , ‘கிரீன் மேஜிக் என்டர்டெர்டெய்ன்மென்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியாகும். என் மனைவி அபர்ணாவிடமும் இதுகுறித்து தெரிவித்திருக்கிறேன். இப்படம் நரபலி தொடர்பான படம் என்பதால் கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள் இப்படத்தை தயவு செய்து பார்க்க வேண்டாம்.

‘அந்த நாள்’ படம் தவிர்த்து
’பிரமாண்ட நாயகன்’ என்ற படத்தில் பெருமாள் வேடத்தில் நடித்துள்ளேன். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் எனக்கு பாராட்டு கடிதம் அனுப்பியது. அதில் ’யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை எனக்கு அளித்திருந்தனர். இது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானத்திடம் பேசி என் படத்திற்கு நெருக்கடி அளித்தனர். இந்தப் பட்டத்தை எனது இரண்டு படத்திலும் நான் பயன்படுத்தவில்லை…” என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே தற்போது நெருக்கடி ஏற்படுகிறது. நான் இப்போதுதான் சினிமாத்துறைக்கு வந்துள்ளேன். ’அந்த நாள்’ திரைப்படம் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்’ என்று கூறினார். நடிகரும் இளம் தயாரிப்பாளருமான ஆர்யன் ஷ்யாம். அதையும் பொறுத்திருந்து போகிறோம்.

 

‘”யூத் சூப்பர் ஸ்டார்’ என்று எனக்கு கிடைத்த பட்டம் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானத்திடம் பேசி என் படத்திற்கு நெருக்கடி அளித்தனர்., ”

‘விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே தற்போது நெருக்கடி …. ’

எனது ”அந்த நாள்’ நிச்சயமாக ‘சைக்கோ’ வை விட சிறந்த படமாக இருக்கும்”… என்பன போன்ற சர்ச்சை பேச்சுகள்.,

மிஷ்கினுடனான ஒரு கோடி ரூபாய் கொடுக்கல் வாங்கல் சர்ச்சை … நிகழ்வுகள்… உள்ளிட்டவைகள் , ஆர்யன் ஷ்யாமை சினிமா பீல்டுக்குள் வருவதற்குள்ளாகவே ஒரு சர்ச்சைக்குரியவராக காட்டுகிறதே .?! அடக்கத்திற்கும் அமைதிக்கும் பெயர் போன ஏவிஎம் நிறுவனத்தின் மருமகனா இவர் .?! என கோடம்பாக்கம் புருவம் உயர்த்துவதை ஆர்யன் ஷ்யாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி !!

😳😳😳😇😀😇😳😳😳