நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

1,095

‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்கு போட்டி போடும் நடிகை ஷிவானி !

நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதா ராஜசேகர் தம்பதியரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதில் அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்த வகையில் இப்போது, அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்.

நடிகை ஷிவானி ராஜசேகர் தமிழ் சினிமாவில், நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “அன்பறிவு” படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் நடிகை ஷிவானி ராஜசேகர் நடிப்பில், தற்போது பல படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் பெற்றுள்ள, ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்ற இந்த சிறப்பு மரியாதை, அதைத்தொடர்ந்து இப்போது மதிப்புமிக்க ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்கு போட்டியிடுவது அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் பிரபலத்தையும் பெற்று தந்துள்ளது… என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

‘மிஸ் இந்தியா’ கிரீடம் கிடைச்சுடுச்சுன்னா ., ஹீ… ஹீ… கண்ணை மூடிக்கிட்டு தயாரிப்பாளர்களை மனநெருக்கடிக்கும் பண நெருக்கடிக்கும் உள்ளாக்கும் வகையில் சம்பளத்தை உசத்திட மாட்டீங்களே ஷிவானி .?!

😳😳😳😇😀😇😳😳😳