நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

1,029

” திரௌபதி, ‘ருத்ர தாண்டவம் ‘ இயக்குனரின் ‘பகாசூரன்’ !

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G
அவர் , தனது ‘ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் ‘பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு ‘பகாசூரன்’என்று பெயரிட்டுளார்.

இந்த ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி @ நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் டைட்டில் லுக் ., சில தினங்களுக்கு முன் வெளியாகி பெருவாரியான ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் ‘பகாசூரன்’ படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மோகன்.ஜியின் இயக்கத்தில் ‘பகாசூரன்’ தமிழ் திரையுலகில் அசகாயசூரனாக அதிரடி செய்யட்டும் !!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் எக்கச்சக்க எதிர்பார்ப்பையும் நிறையவே எதிர்பையும் சந்தித்த இயக்குனர் மோகன்.G தனது ‘ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் ‘பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு ‘பகாசூரன்’என்று பெயரிட்டுளார். இன்னுமா எதிர்பார்ப்பாளர்களை தான்டிய எதிர்பாளர்கள் குரல் கொடுக்கவில்லை .?! ஆச்சர்யமாக இருக்கிறதே ?!! என புலம்பியபடியே சென்றார் ஆபிஸ் பாய் அய்யாவு ! அவரது கேள்விபுலம்பலில் உள்ள எதிர்பார்ப்பும் நியாயம்தானே .?! மோகன்.ஜி படமென்றாலே ஒரு குரூப் எதிர்ப்பு கொடி பிடிக்க ரெடியாகிவிடுமே ..? அந்த குரூப் இந்த முறை அவ்வளவாக சவுண்டு விடவில்லையே … என்ன காரணமாம்.? !!

😃😃😳🥱🤪🥱😳😃😃