நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

1,203
65- ஆண்டு பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ ., 50 நாள் வெற்றி கண்ட உதயநிதியின்
‘நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவினரை கெளரவி(ய)ப்பு !!

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50வது நாள் வெற்றி விழா ., ஞாயிறு (10-07-2022) அன்று மாலை சென்னை ‘தாஜ் கொரமண்டல்’ நட்சத்திர விடுதியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அது சமயம், சிறந்த சமூக நிதி கருத்துடைய அத்திரைப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்தமைக்காகவும் அதில் நடித்தமைக்காகவும் , இயக்கியமைக்காகவும், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர். போனி கபூர் , இணைத்தயாரிப்பாளர் .செண்பகமூர்த்தி, தயாரிப்பாளர் -நடிகர் உதயநிதி ஸ்டாலின MLA உள்ளிட்டோருக்கு ., 65- ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ சார்பாக அதன் தலைவர்.D.R.பாலேஷ்வர் , செயலாளர்.R.S.கார்த்திகேயன் , பொருளாளர்.A.மரிய சேவியர் ஜாஸ் பெல், செயற்குழு உறுப்பினர்கள் .மதிஒளி ராஜா, ஜாக்மென் விஜய் மற்றும் சீனியர் உறுப்பினர். ராம்பிரசாத் பிரபு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மரியாதை செய்து மகிழ்வித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

முன்னதாக ,இந்த 50 -வது நாள் விழாவில் படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் போனிகபூர் தங்க சங்கிலி , மோதிரம் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.

 

ஒரு வினியோகஸ்தரா , தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் ‘விக்ரம்’ உள்ளிட்ட
பல திரைப்படங்கள் இன்று , திரையரங்கில் வெற்றி கரமாக ஓடக்காரணமான உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ 50 நாள் ஓடுவதில் வியப்பு வேண்டாம்… சினிமா பத்திரிகையாளர் சங்கம் அப்படக்குழுவை கௌரவிப்பு செய்திருப்பு சிறப்பு ! என நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு சீனியர் பத்திரிகையாளர் ‘நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவையும் அவர்களை கௌரவித்த பத்திரிகையாளர்களையும் பாராட்டி சென்றது நம் காதிலும் மதிப்பு ஏற்படுத்திடும் படி விழுந்தது மேலும் வியப்பு !!

🤪😀😀😳😇😳😀😀🤪