நம்ம Review :
‘ஜான் ஆகிய நான்’ - திரைவிமர்சனம்
டார்க் லைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன்.எஸ் தயாரிப்பில், அப்பு கே.சாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘ஜான் ஆகிய நான்’.
311 OTT மற்றும் 311channel.com என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது? இத்திரைப்படம்.
இப்படக்கதைப்படி .,
ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாத அந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அந்த கிராமத்தை சேர்ந்த டொச்சு பாண்டி எனும் அருள் அன்பழகன் விவரிக்கிறார். எதற்காக 44 பேர் கொல்லப்பட்டார்கள்?, கொலை செய்யப்பட்டவர்கள் யார் ,யார்?, கொலை செய்தது யார்? போன்ற கேள்விகளுக்கு அருள் அன்பழகன் கொடுக்கும் பதில்கள் உண்மையா? என்பதை ஆராயாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதோடு, அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கமும் கேட்கிறது.
ஆனால், அன்பழகன் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை தெரிந்த, தெளிந்த…. இன்ஸ்’ அப்பு கே.சாமி, களத்தில் இறங்கி கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? என்பதை வித்தியாசமான முறையில் விவரிப்பது தான் ‘ஜான் ஆகிய நான்’.
ரிக்கவரி பாண்டி மற்றும் போலீஸ் அதிகாரி ஜான் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, நடிப்பில் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ரிக்கவரி பாண்டியாக காமெடி, காதல் என அனைத்து ஏரியாவிலும் அலப்பறை செய்திருக்கும் அந்த மனுஷன் ., ஜான் என்ற போலீஸ் அதிகாரியாகவும் மற்றொரு பக்கம் நடிப்பில் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். அதிலும் ரிக்க வரி பாண்டியாக வரும் பாத்திரத்தில் எதிராளி அவரை கட்டி வைத்து தன் ஆட்களுடன் அடித்து துவைக்கும் போது ., “எல்லா வீரனும் சாவுக்கு அடிமைதான் .”, “கண்ணுக்கு முன்னால சாவு இருக்கும் போது பயம் இல்ல …எனக்கு.”என்றெல்லாம் அவர் பேசும் வசனங்கள் வீரதீர நச்-டச் !
டொச்சு பாண்டி என்ற வேடத்தில் நடித்திருக்கும் அருள் அன்பழகன் ஆரம்பத்தில் அப்பாவியாக தொலைக்காட்சி பேட்டியில் பேசிவிட்டு, பிறகு தனது அடப்பாவி தனத்தை காட்டும் எதிர்பாராத திருப்ப காட்சிகள் மிரட்டல் !
இப்பட ஆரம்பத்தில் காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் சீனிவாசன் கடிப்பது பெரும் பலவீனம் . ஆனாலும் சில நிமிட காட்சிகளில் மட்டுமே அவர் வருவதால் பெரிய பாதிப்பு ரசிகர்களுக்கு இல்லை.
நாயகியாக ஹேமா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் நக்ஷத்ரா ராவ் , சில சீன்களே வந்தாலும் பக்கத்து வீட்டு பெண் போன்று பளிச் அழகுடன் மனதில் பச்சக் என பசை போட்டு ஓட்டிக் கொள்கிறார்.
ராஜநாயகம் என்ற பெரிய மனித கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக்சன் பாபு, காமெடி வில்லனாக சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் தனது இயல்பான வில்லத்தனத்தால் கவனிக்க வைக்கிறார். அதிலும் , “உனக்கு யாருமே இல்லைன்னு கவலைப்படுறதைவிட , நீ யாருக்கும் பாரம் இல்லைன்னு சந்தோஷப்படு…” என எதிராளியை பேசியே மதிமயக்கும் இடங்களில் பலே சொல்ல வைக்கிறார்
மருத்துவராக கொஞ்ச நேரமே வரும் நிழல்கள் ரவி, ஒரு காட்சியில் வந்தாலும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஜான் என்ற தொழிலதிபராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா , தன் அனுபவ நடிப்பால் தான் ஏற்ற சில நிமிட கதாப்பாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
நிழல்கள் ரவி, பவர் ஸ்டார் , ஆதேஷ் பாலா ஆகியோரை தவிர படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களாக இருக்கிறார்கள். அவர்களால் இயன்ற அளவுக்கு நடிக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.
கவியரசனின் டி.வி. யின் ஒளிப்பதிவு மற்றும் 311 ஸ்டுடியோஸின் இசை, படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு சமாளித்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, வழக்கமான பழிவாங்கும் கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் சொல்லிய விதம் வித்தியாசமாக இருப்பதை காட்டிலும் சற்றே வெகுஜனங்களுக்கு புரியாதபடியும் இருப்பது தான் கொஞ்சம் குறையாக தெரிகிறது.
சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது ? என்பதையும், ஊடகங்களில் வெளியாகும் பொய் எப்படி ..? உண்மையாகி விடுகிறது என்பதையும் மிக அழுத்தமாக சொல்லியிருப்பதோடு, சமூக அக்கறையோடு வசனங்கள் எழுதியிருக்கும் இயக்குநர் அப்பு கே.சாமி, அதை இன்னும் தெளிவாக சொல்ல முயன்றிருக்கலாம்… என்பது நம் கருத்து.
வித்தியாசமான முயற்சி , ரிவர்ஸ் டெக்னிக் , இன்னும் இன்னும் எண்ணற்ற புதுமைகள்… என விறுவிறுப்பாக படம் எடுக்க முயன்றிருக்கும்… இயக்குநர் அப்பு கே.சாமி,.,
அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றால் மிகையல்ல !இயக்குனர் , இன்னும் சற்றே கூடுதல் கவனம் செலுத்தி இப்படத்தை எடுத்திருந்தால்., ‘ஜான் ஆகிய நான்’ – ‘ரசிகர்கள் ஆகிய எல்லா தரப்பு மக்களு ‘க்கும் புரிந்திருக்கும் ! இன்னும் கூடுதலாக பிடித்திருக்கும் !! என நம்மோடு படத்தை பார்த்து முடித்த நம் நண்பர் நம் காதை கடித்ததோடு ., ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைலிலோ , உங்கள் வீட்டு தொலைகாட்சி பெட்டியிலோ … இலவசமாக பார்க்க விருப்பமா .?!
அதற்கு Google Play Store ல் கீழ்காணும் App ஐ டவுன்லோட் செய்து, அதில் கீழ்காணும் User Details ,
user name & Password ஐ பயன்படுத்தி அதில் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் கீழ்காணும் Free purchase coupon code : 5555 ஐ பயன்படுத்தினால் நீங்களும் Free of cost-ல்: ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை கண்டு களிக்கலாம். என்றார்.அந்த விவரமும் இங்கு உங்களுக்காக….
👇🏻
App link :
https://play.google.com/store/apps/details?id=com.tamilottplatdorm.appUser Details
user name : preview@311channel.com
password : 270820222000👇🏻
311 மொபைல் ஆப் மற்றும் 311channel.com இணையத்தில், Free purchase coupon code : 5555 என்ற எண்ணை பயன்படுத்தி ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம்.
அப்புறமென்ன நம்ம Vera Level Review வ படிச்சுட்டு படத்தையும் மேற்படி ஆப் பை டவுன்லோட் பண்ணி பார்த்துடுங்கோ ! அட ,ஒரே கல்லில் 2 – 3 மாங்கா !!
🤪😃😀😳😎😳😀😃🤪