நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

180
‘சினம்’ திரைப்படம் தியேட்டரில்தான் வர வேண்டும்…”என்று உறுதியாக இருந்தேன் !
– நடிகர் அருண் விஜய் !!

‘‘சினம்’ திரைப்படம் தியேட்டரில்தான் வர வேண்டும்…” என உறுதியாக இருந்தேன் !

– சொல்கிறார் அருண் விஜய் !!

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர்விஜயகுமார் தயாரித்துள்ள படம், ‘சினம்’.

அருண் விஜய், பாலக் லால்வாணி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். ஷபீர் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மதன் கார்க்கி, பிரியன், தமிழணங்கு பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 16-ம் தேதி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபமாக சென்னையில் நடந்தபோது இயக்குநர்கள் பார்த்திபன், ஹரி, மகிழ் திருமேனி, அறிவழகன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரசன்னா… மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் அருண் விஜய் பேசும்போது, ‘‘இந்தப் படம் தியேட்டரில் வர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். பார்வையாளர்கள் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்கு காரணம். எல்லோரும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களைப் பார்த்து கோபப்பட்டிருப்போம். ஆனால் , அதற்குப் பெரிதாக அந்த நேரங்களில்…. எதிர்வினையாற்ற முடியாமல் இருந்திருக்கும்.

அதே போன்ற சூழலில் , இப்படத்தில் ., பாரி வெங்கட் என்ற எனது கதாபாத்திரம் என்ன செய்கிறது ? என்பதுதான் ‘சினம்’ படம். இதற்கு முன்பும் போலீஸ்கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஆனால் , அவற்றிற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

எனது , முந்தைய படங்கள் போன்று ‘சினம்’ படமும் பேசக்கூடிய படமாக, எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும். இவ்வாறு அருண் விஜய் கூறினார். அவரது ”சினம்’ கொண்ட வெற்றியை..” கோடம்பாக்கமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம் !

“எனது , முந்தைய படங்கள் போன்று ‘சினம்’ படமும் பேசக்கூடிய படமாக, எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.” என்கிறார் அருண் விஜய் . அந்த நம்பிக்கையில்தான் நாங்களும் தியேட்டருக்கு வருகிறோம்… என்கிறார்கள் ரசிகர்கள். அவர்களது நம்பிக்கை பொய்த்து போகாத அளவிற்கு அருண்விஜய்யின் ”சினம்’ இருக்கும் என்று அதன் டீஸர், டிரைலர் உள்ளிட்ட முன்னோட்டங்கள் கட்டியம் கூறுகின்றன. பார்க்கலாம் !

😳😳😳🤪😃🤪😳😳😳