நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

138

பிரஷாந்த், அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா, தியாகராஜன் கூட்டணியின் கடின உழைப்பில் அசத்தலாக உருவாகி கலக்க வரும் ‘அந்தகன்’ படத்தின் “டோர்ரா புஜ்ஜி…” பாடல் விரைவில்…!

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்.

‘அந்தகன்’ படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி…” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S தாணு தனது V கிரியேஷன்ஸ் பேனரில் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார் என ‘அந்தகன்’ பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஷாந்த், அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா, தியாகராஜன் கூட்டணியின் கடின உழைப்பில் அசத்தலாக உருவாகி கலக்க வரும் ‘அந்தகன்’ படத்தின் “டோர்ரா புஜ்ஜி…” பாடல். ஆடியோ ரிலீஸ்., விரைவில்… சிம்ரன் , ப்ரியாஆனந்த் இருக்கிறாங்க… கலைப்புலி S.தாணு வெளியீடு… என்னும் பப்ளிசிட்டி ஹைப் ஏற்படுத்தும் தகவல் எல்லாம் ஓ.கே. ‘எங்களுக்கெல்லாம் டாப் ஸ்டார் பிரஷாந்த் இருந்தாலே ஓ.கே.’ அவரை ‘அந்தகன்’ மூலமா , இன்னும் அதிக நாள்…டிலே பண்ணாமல் பிக் ஸ்கிரீனில் எப்போ காட்டப் போறீங்க ? தியாகராஜன் சார் .?! என பிரஷாந்த் ரசிகர்கள் கூவுவது …. அவரது அப்பா காதில் விழுந்திருக்கும்னு நம்புவோம் !!

😳😇😀🥱🤪🥱😃😇😳