நமக்கு வந்த News.. நம்ம கேட்ட Talks…
‘டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்தேன்… என நான் சொல்வதாலும்., ‘ஹீரோயின் ஓரியன்டட் ‘ சப்ஜெக்ட்டில் தொடர்ந்து நடிப்பதாலும்… என்னை ‘அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ‘ என கூறாதீர்கள். “அது, நயன்தாரா மட்டுமே! நான், நானாக இருப்பதையே விரும்புகிறேன் !!”
-நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேச்சு !!!
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் (ஐஸ்வர்யா ராஜேஷ் ன் அண்ணன்)… உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ’18 ரீல்ஸ்’ எஸ் பி சௌத்ரி, கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், படத்தொகுப்பாளர் ராமர், கலை இயக்குனர் டான் பாலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்., ” நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘கனா’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் ‘டிரைவர் ஜமுனா’ வெளியாகிறது.
இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப்படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.
படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர், கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால், சவாலான காட்சிகளில் கூட சரியாக நடிக்க முடிந்தது. என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால்.. அதற்கான முழு புகழும் இயக்குநரையே சாரும்.
‘வத்திக்குச்சி’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் இயக்குநர் கின்ஸ்லினுக்கு இந்த படம் மிகப்பெரிய பாராட்டையும், வெற்றியையும், வரவேற்பையும் அளிக்கும்.
எனது நடிப்பில் உருவான ‘க/பெ .ரணசிங்கம்’ உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் 0TT – உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது. ஆனால் ‘டிரைவர் ஜமுனா’ படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், மிகவும் ரிஸ்க்கியான சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
அவரிடம் செய்தியாளர்கள் .,
டூப் போடாமல் டிரைவர் ஜமுனா படத்தில் ரிஸ்கி ஷாட்களில் நடித்தேன்…என்கிறீர்கள்… மேலும், ஹீரோயின் ஒரியன்டட் சப்ஜெக்ட்டுகளிலேயே தொடர்ந்து நடிக்கிறீர்கள். நயன்தாரா கூட நிறைய பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு விட்டு அதன்பிறகே ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்து லேடி சூப்பர்ஸ்டார் ஆனார். But நீங்கள் நேரடியாக அதிகம் காலம் தாழ்த்தாது… ‘லேடி சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்த்தை அடைய துடிப்பது போல் தெரிகிறதே ? இப்பொழுது நயன்தாராவுக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்து அந்த லேடி சூப்பர்ஸ்டார் இடம் காலியாக உள்ளது. அதை பிடித்திடும் திட்டம் ஏதும் உள்ளதா ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ..?
என கேள்வி நேரத்தில் கேட்ட பொழுது.,
”டிரைவர் ஜமுனா’ படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். ”இப்படி எல்லாம் நான் சொல்வதாலும் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டில் தொடர்ந்து நடிப்பதாலும் என்னை ‘அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ‘ நீங்கள் தானே .?! என கேட்கிறீர்கள். உங்களுக்கு என் பதில் அது , அதாவது ., ‘லேடி சூப்பர்ஸ்டார் ‘ என்பது நயன்தாரா மட்டும்தான் ! நான், நானாக இருப்பதையே விரும்புகிறேன் !!” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்., பளீரென ‘பளிச்’பதில் கொடுத்து தப்பித்தது … ‘டிரைவர் ஜமுனா’ பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இப்படி , ஐஸ்வர்யா ராஜேஷ் பொண்ணு., ‘பளிச்’ன்னு பதில் சொன்னாலும் ., தற்போது, நயன் – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ எனும் டைட்டில் காலியாகவே …இருப்பதால்… அந்த இடத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டியே இல்லாமல் வெகு விரைவில் வந்து சேர்வார் …. என நம் அருகில் அமர்ந்திருந்த சினிமா பட்சி ஒருவர் ஆருடமாக கூறியதையும் மறுப்பதற்கும் மறைப்பதற்குமில்லை … என்பதையும் இத்தருணத்தில் Veralevelnewsandtalks.com ல் வெளிப்படுத்த வேண்டியுள்ளதுங்கோ !!
🤪😇🥱😃😳😃🥱😇🤪