நமக்கு வந்த News…நம்ம கேட்ட Talks…

159

“இப்போதைக்கு கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை !என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் !! ஆனால் , இதுவரை யாரையும் காதலிக்கவில்லை !!!”

– அலட்டிக்காது அசத்தும் நடிகர் அசோக் செல்வன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன்., தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும், விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது.

ஓ மை கடவுளே, மன்மத லீலை … ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமீபமாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தார் அசோக் செல்வன்.

இச்சந்திப்பில், அவர் பத்திரிகை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து சில துளிகள் இங்கே…

நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள் .அதை சொல்லிக்கொண்டே சிம்பதி தேடிட நான் விரும்பவில்லை. அதேநேரம், எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துக்களும் தான் என்னை செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான்.  உங்கள் கருத்துக்களின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும் .அதுவே என் விருப்பம்.

ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். ‘நித்தம் ஒரு வானம் ‘ படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்து தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன்.

‘நித்தம் ஒரு வானம் ‘ படத்தில் ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி…உள்ளிட்ட 3 நாயகியரில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை யார் ? என கேட்கின்றனர். மூவரையுமே பிடிக்கும் என்பதே என் பதில்.

கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம்.

எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை. ஆனால் ,வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது. அதற்காக இப்பொழுதே யாருடன் காதல் ? என கேட்டீர்கள் என்றால் இன்னும் நான் யாருடனும் காதலில் விழவில்லை என்பதுதான் உண்மை

அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன் என்றவர் சினிமா பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் மறக்க வில்லை.

 

தன் திரையுலக வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு வெறும் வாயால் மட்டுமின்றி அன்று தான் நின்ற மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரிலும் ஒரு ஒரத்தில் தன் புகைப்படத்தை நிறுத்திவைத்து அந்த ஒட்டுமொத்த பேனரிலும் ஒவ்வொரு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் லோகோ மற்றும் பெயர்களை அசத்தலாக அச்சேற்றி (நம் Veralevelnewsandtalks.com website லோகோ மற்றும் பெயரையும் கூட Thanks Ashok Selven எனும் பெயருக்கு மேல் மையமாக வைத்து அசத்தியிருந்தது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி.) நன்றி தெரிவித்திருந்த அசோக் செல்வனின் வித்தியாசமான ‘தேங்க்ஸ் கிவ்விங் மீட் ‘டை மறக்கவே முடியாது … என சினிமா பத்திரிகையாளர்கள தங்களுக்குள் பேசி சென்றது குறிப்பிடத்தக்கது.
அசத்துறேள் அசோக் செல்வன்.

🤪🥹😳😇🥱😇😳🥹🤪