நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…
Wow ! ‘மாஸ்’ காட்டும் நடிகர் துருவா சர்ஜாவின் ‘மார்டின் ‘ பான் இந்தியா மூவி டீசர் !!
‘ஆக்சன் கிங் ‘ அர்ஜூன் எழுதியுள்ள கதையில்
‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் பட டீசர் இந்தியா முழுக்க , தமிழ், கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , இந்தி ஆகிய மொழிகளில் பட்டையை கிளப்பி வருகிறது.இதுபற்றிய விவரம் வருமாறு :-
Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில்,’ஆக்சன் கிங்’ அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம்.
இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இரு தினங்களுக்கு முன் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா,’ஆக்சன் கிங் ‘ அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின்… உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தையும் தருவதாகவும் அமைந்திருந்தது.
இவ்விழாவில் வெளியிடப்பட்ட டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர்.
வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாக பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்க்ள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி… என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.
‘ மார்டின் ‘ நடிகர்கள் விவரம் :-
துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக்
தொழில் நுட்ப குழு விவரம் :
இயக்கம்: AP அர்ஜுன்
கதை: ஆக்சன் கிங் அர்ஜுன்
தயாரிப்பு: உதய் K மேத்தா
தயாரிப்பு நிறுவனம் : Vasavi Enterprises
தியேட்டர் டீஸர் இசை: ரவி பஸ்ரூர்
வசனங்கள்: AP அர்ஜுன்
எழுத்துக் குழு: சுவாமிஜி, கோபி
இசை: மணி சர்மா
பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே எம் பிரகாஷ் இப்படி இந்திய அளவில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் உறுதுணையுடன் உலகம் முழுக்க டிரண்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது ‘மார்டின்’ டீஸர் என்பது சிறப்பு .ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக ‘மார்டின்’ க்கு ‘ஆக்சன் கிங் கதை ., அவரது சகோதரி மகன் ‘ஆக்சன் பிரின்ஸ்’ நடிப்பு… என்பதால் தேசப்பற்று , பாகிஸ்தான் தீவிரவாதம்… எல்லாம் டீஸரிலேயே தூக்கலாக இருப்பதாக தெரிகிறதே.?! டான்ஸிலும் வல்லவரான துருவா சர்ஜா வை படத்தில் ஜனரஞ்சகமாக களம் ஆடவும் விடுவாரா அர்ஜூன் .?! எனும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு படக்குழுவினர் ., இது வெறும் , டீஸர் தான் டிரைய்லர் & இசை வெளியீட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் ‘பிரின்ஸி ‘ ன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் இருக்கும் என்றனர் படக்குழுவினர். அவை , அனைத்தும் இருந்தால் அசத்தல் தான் போங்கள் !!!
🤪😄😂😇😎😇😂😄🤪