நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

129

50 வருட திரையுலக அனுபவம் கொண்ட நடிகை சத்யப்ரியா, தன் சினிமா நட்புகளுடன் நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

திரையுலகில் 50 வருட அனுபவம் பெற்ற பிரபல நடிகை சத்யப்ரியா தனது பிறந்தநாளை தி. நகர் ரெசிடென்ஷி ஹோட்டலில் சமீபமாக கொண்டாடினார்.

நடிகர்கள் நாசர், SV. சேகர், , V. நிர்மலா,லதா, குமாரி சச்சு, நளினி,, சீதா, தேவயானி, ஜெயமாலினி மூத்த தம்பி சத்ய நாராயணா, ஸ்ரீலேகா ராஜேந்திரன், சங்கவி, KR. வத்சலா இயக்குனர்கள் KS.ரவிக்குமார், விக்கிரமன், ‘எதிர் நீச்சல்’ TV தொடர் இயக்குனர் திருச்செல்வம், மேலும் , நடிக நடிகர்கள் மாரிமுத்து, விபு, கமலேஷ், கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி ஹரிப்ரியா போன்ற பல பிரபல கலைஞர்கள் முன்னிலையில் நடிகை சத்யபிரியா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிகழ்வில் பங்கேற்ற திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

“சத்தியமா சொல்றேன்., 50 வருட திரை அனுபவம் கொண்ட சத்யப்பிரியா மாதிரி நடிகைகளை தமிழ் சினிமாவில் வரும் தலைமுறைகள் எல்லாம் பார்க்க முடியுமா ? தெரியாது. ஆனா , நாமல்லாம் அவர் மாதிரி அனுபவமிக்க நடிகைகள் வாழும் காலத்தில் வாழ்ந்தோம்னு பெருமைபட்டுக்கலாம் …” என இந்த பிறந்தநாள் விருந்துக்கு வந்த இரண்டு சீரியல் நடிகைகள் நம் காது படவே பேசி சென்றது சத்யப்பிரியாவின் பெருமையை பறை சாற்றும் படி இருந்ததென்றால் மிகையல்ல !!

😄😄😄😄😎😄😄😄😄