நமக்கு கிடச்ச News.. நம்ம கேட்ட Talks…

87

“இளையராஜா , மிஷ்கின், சமுத்திரகனி ஏ.எல்.விஜய்…
கூட்டணியில்., ‘சொல்வதெல்லாம் உண்மை’ லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஆர் யூ ஓகே பேபி.?!’ ”

விரைவில் திரையில்…

இன்று , தமிழ் திரையுலக பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் லஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகனம்’ படத்தில் தொடங்கிய அவரது திரை இயக்குனர் பயணம் விரைவில் வெளிவரவருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி.?!’ வரை தொடர்கிறது.

‘மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் ‘ பேனரில் ராமகிருஷ்ணன் தயாரிக்க, இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை தயாரிப்பாளராக இணைந்திருக்கும் படம் தான் ‘ஆர் யூ ஓகே பேபி.?!’ .

மேற் காணும் ,படத்தை தயாரிக்கும் ராமகிருஷ்ணன் ? லஷ்மியின் கணவரேதான் ! லஷ்மியும் , அவரது கணவரும் ஏ.எல். விஜய்யுடன் சமீபமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

“‘ஆர் யூ ஓகே பேபி.?!’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துள்ளீர்களே..?” என்று லஷ்மி ராமகிருஷ்ணனை பத்திரிகையாளர்கள் கேட்டதும்., “ஆங்கிலம் என்றாலும் , இது ரொம்பவும் பொதுவான வாசகம் தான். எல்லோருக்கும் தெரிந்த வாக்கியமும் கூட இதை விஜய் சேதுபதி ஒரு படத்திலும் அடிக்கடி மேடைகளிலும் சொல்லக் கேட்கும் போது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் இந்த படத்தின் டைட்டில் லுக்கை அவரை வைத்தே வெளியிட்டேன்.

அத்துடன் இந்தப் படத்தின் கதையே ஒரு குழந்தையைச் சுற்றிதான் நடக்கிறது, நகர்கிறது. எனவே எப்படிப்பார்த்தாலும் இந்த டைட்டில் சரியானதாகவே இருக்கிறது…” என்றார்.

சமுத்திரக்கனி, அபிராமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி .?!’ படத்தில் முல்லை அரசி எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “யார் இந்த முல்லை அரசி..?

இந்தப் பாத்திரத்துக்கு சிறிய வயதில் தாயாகும் ஒரு பெண் தேவைப்பட்டாள். அதற்கான தேடலில் இருந்தபோது என் பட படத்தொகுப்பாளர் இந்தப் பெண்ணைப் பற்றிச்சொன்னார். ‘பேப்பர் ராக்கெட்’ இணையத் தொடரில் நடித்திருந்த இந்தப் பெண்ணை நேரில் வரவழைத்துப் பார்த்தபோது அந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். நடிப்பில் பிய்த்து உதறி இருக்கிறார் முல்லை அரசி.

எதிர்பாராத விதத்தில் குழந்தைக்கு தாயாகும் ஒரு பெண்ணின் பாத்திரம் அது. சமூகம் எப்படி எதிர்பார்க்கிறதோ அப்படி இல்லாத ஒரு விஷயத்தை இந்தச் சமூகமும் சட்டமும் முக்கியமாக மீடியாக்களும் எப்படிக் கையாளுகின்றன என்பதே படத்தின் மையக்கரு..!”

“அப்படியானால் கதையைத் தாங்கிச் செல்லும் முக்கியமான பாத்திரம் ஏற்கும் இந்த முல்லை அரசிக்கு பதிலாக முன்னணி நடிகை ஒருவரைப் போட்டிருக்கலாமே..?”

“வழக்கமான சினிமாவை எதிர்பார்ப்பவர்கள் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ கதை என்பதை விட அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகரோ , நடிகையோதான் என் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த அளவில்தான் கடைசியாக நான் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படத்திலும் என் அபிமான நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லினை அறிமுகப்படுத்தினேன். அப்போதும் இதே கேள்வி வந்தது.

இந்தப் படத்திலும் அப்படித்தான். ஆனால் முல்லை அரசியின் நடிப்பைப் பார்த்தால் இந்தக் கேள்வியை நீங்கள் நிச்சயம் கேட்க மாட்டீர்கள்..”

“தமிழ், தெலுங்கு, மலையாளம்… என்று பல மொழிகளில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரக் கனியை இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க சம்மதிக்க வைத்தது எப்படி..?”

“எனக்கு அது பெரிய ஆச்சரியம்தான். அவரிடம் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டைக் கொடுத்தேன். கொடுத்த அன்று இரவே அந்த ஸ்கிரிப்ட்டை முழுமையாகப் படித்துவிட்டு அடுத்த நாள் காலை “இதில் நான் நடிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டார். அவரது பங்கும், ஒத்துழைப்பும் இந்தப் படத்தில் மிக முக்கியமானது.

அவருக்கு ஜோடியாக அபிராமி ஒரு இடைவெளிக்கு பின் இதில் நடிக்கிறார். இடையில் அவர் நடிக்காமல் இருந்தாலும் கூட என்னுடன் தொடர்பில் இருந்தார். “எப்போது நாம் இணைந்து வேலை செய்யப் போகிறோம்..?” என்று கேட்டுக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தில் அதற்கான சரியான வாய்ப்பு இருக்க அவரை நடிக்க வைத்துள்ளேன்..!”

படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ், இந்தப் படத்துக்கு இசை ஞானி இசையமைக்கிறார் என்பது…

“எவ்வளவு அனுபவமும் ஞானமும் மிக்கவர் இளையராஜா சார். அதனால் அவரிடம் ஸ்கிரிப்ட்டைத் கொடுத்ததை தவிர வேறு எதுவும் நான் சொல்லவே இல்லை. அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவர் இசைப்பதை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.மற்றதெல்லாம் அவரே செய்துவிட்டார். அதுவும் கூட, நான் தரையில் அமர்ந்து அவர் இசையை ரசிக்க, அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தது பெண் இயக்குனருக்கு இளையராஜா உரிய மரியாதை கொடுக்க வில்லை… என ஷோசியல் மீடியாக்களில் சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும், என்ற லஷ்மியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ராமகிருஷ்ணன், “நாங்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டைப் படித்துவிட்டு அவரை சென்று பார்த்த போது எங்கள் படத்துக்கான பாடலையும் எழுதி தயாராக வைத்திருந்தார். அது எங்களுக்கு பெரிய ஆச்சரியம்..!” என்று கூற தயாரிப்பாள கணவர் ராமகிருஷ்ணனை ஆமோதித்து சிரித்தார் இயக்குனர் லஷ்மி

“சரி இதில் இணை தயாரிப்பாளராக நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்..?” என்று இவர்கள் (லஷ்மி & ராமகிருஷ்ணன்) இருவர் அருகில் அமர்ந்திருந்த ஏ.எல்.விஜய்யை கேட்டபோது…” என்னுடைய ‘பொய் சொல்ல போறோம் ‘ படத்தில்தான் முதன்முதலாக நடிகையாக சினிமாவில் அறிமுகமானார் லஷ்மி ராமகிருஷ்ணன். மஸ்கட்டில் இருந்து அவர் இந்தியா திரும்பி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் செட்டில் நடித்தோம், கிளம்பினோம் … என்று இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் என்னிடம் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து, தெளிந்து கொண்டிருப்பார்.

அதுவே எனக்கு ஆச்சரியமாக இருக்க , திடீரென்று இயக்குனராகவும் ஆகிவிட்டார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தவுடன் என்னிடம் காண்பித்தார். அதில் இம்ப்ரஸ் ஆகித்தான் இந்தப் படத்தில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்..!” என்றார் விஜய்.

இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார். அது பற்றி லஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது…

“நான் கேட்டவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார் மிஷ்கின். என் மீதான நம்பிக்கை அது…” என்றவர், “இந்தப் படத்தில் கிளைமாக்ஸ்சில் 20 நிமிடங்களுக்கு மேல் ஒரு நீதிமன்ற சீன் வருகிறது. மிகவும் ஹைலைட்டான அந்த காட்சியில் நீதிபதியாக நடித்திருக்கிறார் நரேன்.

அந்த ஒரு காட்சியில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் டப்பிங் பேசும்போது அவர் அவரை அறியாமல் கண்கலங்கி விட்டார். அதுவே இந்தப் படம் சரியாக வந்திருக்கிறது என்பதற்கான சாட்சி..!” என்றார்.

மேலும் தொடர்ந்து, “நான் தொலைக்காட்சியில் பிரபலமான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைப் போன்ற ஒரு நிகழ்வும் இந்த ‘ஆர் யூ ஓகே பேபி.?!’ படத்தில் வருகிறது. ஆனால் அதை ஒரு கருவியாக தான் வைத்திருக்கிறேனே தவிர அதுவே முழுப்படமும் ஆகிவிடாது..!” என்றார்.

“நான் தொலைக்காட்சியில் பிரபலமான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைப் போன்ற ஒரு நிகழ்வும் இந்த ‘ஆர் யூ ஓகே பேபி.?!’ படத்தில் வருகிறது. ஆனால் அதை ஒரு கருவியாக தான் வைத்திருக்கிறேனே தவிர அதுவே முழுப்படமும் ஆகிவிடாது..!” என்று முடித்துக்கொண்டார் அல்லவா லஷ்மி ராமகிருஷ்ணன் ? அதைப்பார்த்து ஒரு பத்திரிகையாளர் கிசுகிசுப்பாக., அம்மணி.,
‘சொல்வது எல்லாம் உண்மை’என்று இப்படம் பார்க்கும் வரை நாமும் நம்பித்தானே ஆக வேண்டும்.? என கேட்டபடி களைந்தது நமக்கும் வாஸ்தவமாகவே பட்டது. ஹீ…ஹீ…. இப்படம் வெளிவரும் வரை நாமும் அப்படியே நம்புவோம் !!