நமக்கு வந்த Nerws…நாம கேட்ட Talks…

107

“ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் நடிகர் ஜெய் ஆகாஷ் in ‘யோக்கியன்’!”

ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் ‘யோக்கியன்’
ஜெய் ஆகாஷ் தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘யோக்கியன்’. இதில் நாயகிகளாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘காமெடி: சாம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை சாய் பிரபா மீனா இயக்கியிருக்கிறார். பால்பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார்.

’யோக்கியன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், நாளை (ஜூலை 28) திரையரங்குகளில் வெளியாவதோடு, ஏ கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App) என்ற ஒடிடி தளத்திலும் வெளியாகிறது.

முதல் முறையாக ஒரே சமயத்தில் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் ‘யோக்கியன்’ படம் வெளியாவது குறித்து கூறிய நடிகர் ஜெய் ஆகாஷ், “ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் ‘யோக்கியன்’ படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும்.கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

எந்தவொரு படமும் மக்களிடம்.கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. ஆனால் இப்போது தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவ தில்லை.அவர்களை குற்றம் சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான் ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை. ஏ கியூப ஆப்பை ஆண்ட்ராய்ட் போனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் போனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக டவுன் லோடு செய்துகொள்ளலாம். அதில் படத்தின் டிரெய்லர் வரும் அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும். வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.

A கியூப் ஆப்பிள் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள். இதனால் படத்தின். மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பிள் வெளியிட எனது 3 படங்கள் ரெடியாக உள்ளது.படம் எடுத்துவிட்டு தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில் வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப்படும் அத்துடன் 80 சதவீதம் வருமானமும் அளிக்கப்படும் 20 சதவீதம் மட்டுமே எமது ‘ஏ கியூப் மூவிஸ் ‘ ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும்.

சினிமாவில் பல வருடங்களாக நான் நடித்து பெற்ற பெயரைவிட ஜீ தமிழ் டிவியில் ‘நீ தானே என் பொன் வசந்தம் ‘ என்ற சீரியலில் சில காலங்கள் நடித்ததன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிட்டேன். அதனால் அவ்வளவு ரசிகர்களும் என் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

ஜூலை 28ம் தேதி தியேட்டரிலும் ‘யோக்கியன்’ ரிலீஸ் ஆகிறது. குறைந்தளவு தியேட்டரில்தான் படம் வெளியாகியுள்து. ரசிகர்கள், தியேட்டரில் படத்தை பார்க்க முடியா விட்டாலோ , தவற விட்டாலோ.., ஏ கியூப் மூவிஸ் ஆப்பிள் ‘யோக்கியன்: படத்தை பார்த்து ரசிக்கலாம்.

ஒரே நேரத்தில் ஓடிடி யிலும் , திரையரங்கிலும்….ஒரு புதிய படம் எனும் நடிகர்
ஜெய் ஆகாஷின் சிந்தனையும் முயற்சியும் சிறப்பு தான். இதற்கு தியேட்டர்காரர்களும் ஜெய் ஆகாஷ் படமென்பதால் பெரிதாக எதிர்ப்பு காட்டாமல் இருக்கிறர்கள். இதே அஜீத் , விஜய் படமென்றால் விடுவார்களா .?! என இந்த பிரஸ் மீட் டின் போது பத்திரிகையாளர் வரிசையில் இருந்து ஒரு இளம் நிருபர் வினவியது… ஜெய் ஆகாஷ் காதுகளில் விழுந்திருக்க நியாயமில்லை… என்றாலும் ., நம் கவனம் ஈர்த்ததை இங்கு பதிவு செய்து விட்டோம். ஹீ…ஹீ…!

😃🤪😇😜😩😎😩😜😇🤪😃