நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…
“விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா ஜோடி மீண்டும் இணைந்துள்ள ‘ரெய்டு’!”
தீபாவளி ரிலீஸ் !!
————-++++++++++————-
அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் ‘ரெய்டு’. ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இவரக்ளுடன் ரிஷி, செல்வா, செளந்தரராஜன், இயக்குநர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எதிர்மறை விசயங்களை வைத்து வித்தியாசமாக உருவாகியுள்ளதாம் விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ திரைப்படம் ! இத்தகவலை சமீபமாக நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு …
எம் ஸ்டுடியோஸ், ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் எஸ்.கே.கனிஷ்க் மற்றும் ஜி.கே என்கிற ஜி.மணிகண்டன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியிருக்கிறார். கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். வீரமணி கணேசன் கலை இயக்குநராக பணியாற்ற, கே.கணேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரெய்டு’ திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீடு சென்னை பிரசாத் லேபில் சமீபமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, “எதிர்மறை விசயங்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளை தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்.” என்றார்.
இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் முத்தையா பேசுகையில், “கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்” என்றார்.
இயக்குநர் கார்த்தி பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது” என்றார்.
நடிகை ஸ்ரீதிவ்யா பேசுகையில், “’ரெய்டு’படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜா பேசுகையில், “இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.
நடிகர் செளந்தரராஜன் பேசுகையில், ”நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. ‘குட்டி புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
இவர்கள் தவிர
இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர் வேலு பிரபாகரன் ,
நடிகர் செல்வா , நடிகர் ரிஷி மற்றும் இப்பட
ஒளிப்பதிவாளர் கதிரவன் , ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பேசினர் வரும் தீபாவளி ரிலீஸ்’ரெய்டு’ என்பது குறிப்பிடத்தக்கது!விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யா ஜோடியின் இந்த
‘ரெய்டு’ தீபாவளி ரேஸில் முந்தி இப்படம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் ‘ரெய்டு’கள் நடக்கும் அளவிற்கு வசூலை வாரி குவித்தால் சரி! என இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சீனியர் பத்திரிகையாளர் ஒருவர் கிண்டலாக கிசுகிசுத்தது நம் காதில் விழுந்தது கடவுளின் காதுகளிலும் விழுந்து மெய்யாகட்டும் !!😄😜😇🤪😃😎😃🤪😇😜😄