நமக்கு கிடச்ச News…நாம கேட்ட Talks..

37

கோகுல் இயக்கத்தில், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் ., ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ ! ஜனவரி – 25 தியேட்டரில் ரிலீஸ் !!

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’ , ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல்., இப்போது இயக்கியுள்ள திரைப்படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்திருகிறார். ஐசரி கே கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரித்துள்ளது.

‘எல்கேஜி’ (2019) மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ (2020) படங்களுக்குப் பிறகு ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ மூலம் தயாராகியுள்ள ஆர்ஜே பாலாஜியின் மூன்றாவது படம் ‘சிங்கப்பூர் சலூன் ‘ . இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பற்றி ஆர்.ஜே பாலாஜி இவ்வாறு கூறுகிறார். எவ்வாறு ?

” இந்த படம் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் மக்களுக்கு தேவையான கமர்சியல் எலிமெண்ட்ஸ் எல்லாம் கலந்து இருக்கும். லோகேஷ் கனகராஜ் , ஜீவா கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், ஒரு பெரிய சர்ப்ரைஸ் ,ஒரு பெரிய நடிகர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவர் யாரென்று ? இப்ப சொல்ல முடியாது , படத்தில் அவரை பார்த்து நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆகுவீர்கள். ஆரம்பத்துல இந்த திரைப்பட கதையை உள்வாங்க எனக்கு கடினமா இருந்தது அப்புறம் போக போக நான் பழகிக்கிட்டேன். என் ஆரம்பத்துல நான் வந்து கத்துக்கிட்ட பல விஷயங்கள் இப்போ வரைக்கும் எனக்கு உதவிகரமா இருக்கு. சமூக கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம் அரசியல் பேசாத இந்த படம் , மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார்.

இந்தப்படம் பற்றி இயக்குனர் கோகுல் கூறுகையில்.,

“‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் … என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கி இருக்கு. நாம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் வருமோ ! அது மாதிரி இந்த திரைப்படத்தை பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக ஒரு திருப்தியான மனநிலை தோன்றும். என் ஸ்டைல் நகைச்சுவை இந்த படத்துல இருக்கு அது இல்லாம , வித்தியாசமாகவும் முயற்சி செஞ்சிருக்கோம். நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய முடி திருத்துபவர்கள் தான் இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன். இன்னிக்கு இருக்கக்கூடிய எல்லா பெரிய நடிகர்களும் முடி திருத்துபவர்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்டுகாக தான் காத்துக்கிட்டு இருக்காங்க, அந்த அளவுக்கு இன்னைக்கு இந்த தொழில் ஒரு மிகப்பெரிய இடத்தை அடைஞ்சிருக்கு. இந்த உள் கருத்தை மையமாக வச்சு, இதிலேயே நிறைய விஷயங்களை நாங்க இந்த திரைப்படத்தில் பேசி இருக்கோம். கண்டிப்பா உங்க எல்லாருக்கும் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ படம் ரொம்ப பிடிக்கும்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் படம் பற்றி பேசுகையில்,

“‘சிங்கப்பூர் சலூன் ‘ இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிக பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம். ஆர். ஜே. பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா ? அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சம் ., அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார், எனக்கு இந்த கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் , மோட்டிவேஷன் … மாதிரி பல சுவாரசிய அம்சங்களை இந்த திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்.

‘சிங்கப்பூர் சலூன் ‘ வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது !!

முன்பெல்லாம் நம் ஊரில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை … என்றதும் சிங்கப்பூர் / மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி முடிதிருத்துவோர் சிலர்., காண்போர் அதிசயிக்கும் வண்ணம் தங்கள் வாழ்க்கையிலும் ஸ்டெயிலிஸ்ட்டாக மாறி ., ஊரையும் ஸ்டையிலாக (அட்லீஸ்ட் ஹேர் ஸ்டைலில் மட்டுமாவது …) மாற்றுவார்கள் . அப்படியான கதையா ‘சிங்கப்பூர் சலூன் ‘ படக்கதை எனக் கேட்டால் ., இயக்குநர் கோகுலும் , நாயகர் ஆர் ஜே பாலாஜியும் ஒரு சேர மறுத்து ., ஹேர் ஸ்டைலிஸ்ட் பற்றிய ஸ்டைலான கதை ஆங்காங்கே பொலிட்டிக்கல் சட்டையரும் இருக்கும் என்கின்றனர். ஒரு காலத்தில் சலூன்களில் தானே சகலமும் பேசப்பட்டு சமரசமும் உலாவியது.?! இவர்கள் இந்தப்படம் வாயிலாக எதை பேசியிருக்கிறார்கள் ? எதை எதையெல்லாம் உலாவ விட்டிருக்கிறார்கள் என்பது வரும் ஜனவரி -25ம் தேதி தெரிந்துவிடப்போகிறது… அதுவரை காத்திருப்போம் ., என அந்த ‘சிங்கப்பூர் சலூன் ‘பட பிரஸ் மீட் டில் இருந்து கிளம்பினோம். அப்போ இதைப் படித்து முடித்த நீங்களும் ஜனவரி – 25 ‘சிங்கப்பூர் சலூன் ‘ திரைப்படத்தைக்காண தியேட்டருக்கு வர்றீங்கள்ளா .?!

🤪😇😄😃😜😎😜😃😄😇🤪