நமக்கு வந்த News…நம்ம கேட்ட Talks…

83

பா. இரஞ்சித் சிஷ்யர் ஜெயக்குமார் இயக்கத்தில் .,
” புளூஸ்டார் ” ஜனவரி 25 ரிலீஸ் !

பிரபல திரை நட்சத்திரங்கள் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பாண்டியராஜ், திவ்யா துரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘புளூஸ்டார்’.

அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைத்திருகிறார் கோவிந்த் வசந்தா. தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பாடல்கள் அறிவு மற்றும் உமாதேவி.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

 

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது ‘புளூஸ்டார்’.

ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை பட வெளியீட்டில் வெற்றி முத்திரை பதித்து வரும் ‘சக்தி பிலிம் பேக்டரி’ வெளியிடுகிறது.

‘லெமன் லீப் கிரியேசன்ஸ்’
தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி ,
G சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா. இரஞ்சித்
இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது ‘புளூஸ்டார்’ … என்பதெல்லாம் சரி ., பா. இரஞ்சித்தின் உதவியாளர் இயக்குநர் , பா. இரஞ்சித்தும் இதில் ஒரு படத்தயாரிப்பாளர் எனும் போது படத்தில் ஜாதி அரசியலும் இருக்க வேண்டுமே .?! இருக்கிறதா .?! என இந்த ‘புளூ ஸ்டார்’ பட நியூஸ் படித்து விட்டு நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.

😄😇😃🤪😎🤪😄😇😃