நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

85

ராமஜென்ம பூமி யில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளன்று வெளியான ‘ராமம் ராகவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் பட்டைய கிளப்புது!!

தமிழ் & தெலுங்கு இரு மொழிகளில் .. சமுத்திரக்கனி நடிக்கிறார் !!

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக வலம் வரும் தன்ராஜ் இயக்குகிறார்.

‘ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ்’ பேனர் பிரபாகர் ஆரிபாகா வழங்க , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, தமிழ் & தெலுங்கு ஆகிய இருமொழிகளில் , இப்படத்தை
இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார்.

அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது .
தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சென்னை, மதுரை , தேனி, திண்டுக்கல் … போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கதை : சிவ பிரசாத் யானல -ஒளிப்பதிவு -துர்கா பிரசாத் கொல்லி, இசை -அருண் சிலுவேறு, கலை -டெளலூரி நாராயணன், Executive producer -தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி , எடிட்டிங் -மார்த்தாண்டம் கே வெங்கடேஷ், சண்டைபயிற்சி -நட்ராஜ், வசனம் -மாலி திரைக்கதை இயக்கம் –
தன்ராஜ் கொரனாணி. தயாரிப்பு -பிருத்வி போலவரபு என பிரபலங்கள் பங்குபெற வெகு ஜோராக தமிழ் & தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது ‘ராமம் ராகவம்’ திரைப்படம்.

ராமஜென்ம பூமி , ராமர் பிரதிஷ்டை ஆகியவற்றை தொடர்ந்து… ‘ராமம் ராகவம்” அனுமான் , அனுமான்- 2 மாதிரியான ராமர் – அனுமார் புராண படங்களை இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.?! என நம்புவோம் !! ராம ராம ராமா… ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான் ப்ளீஸ், ரசிகர்களை காப்பாற்றுங்கள் ஹீ…ஹீ…ஹீ… !!!

🤓😃😇🤪😄😎😄🤪😇😃🤓