நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…
‘பர்த் மார்க்’ (Birth Mark). படத்தில் நிறை மாத கர்ப்பிணியாக நடிக்கும் ‘ஜெயிலர்’ மிர்னா !
“நிஜ கர்ப்பவதியின் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காக நாயகி மிர்னா செய்த காரியம் !!”
‘சேபியன்ஸ் எண்டர்டெயின்மென்ட்’ சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் மேற்படி இருவரில் ஒருவரான விக்ரம் ஶ்ரீதரன்.
‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர ., பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை பணியை அனுசுயா வாசுதேவன் கவனித்துள்ளார்.
இந்த மாதம் (பிப்ரவரி) 23 -ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் இருவரும் சமீபமாக மீடியாக்களிடம் பேசினார்கள்.
ஶ்ரீராம் சிவராமன் கூறுகையில்…
“கொரோனா கால கட்டத்தில் இப்படம் பற்றி பேசினோம். இதுவரை அறியாத களம் பற்றி பேசுகையில், ‘நேச்சுரல் பர்த்’ பற்றி விக்ரம் ஒரு லைன் கூற அது பற்றி நாங்கள் நிறைய படித்து அறிந்தோம்.
இந்தியாவின் சில மாநிலங்களில் ‘நேச்சுரல் பர்த்’ முறை இருந்தாலும், சில மாநிலங்களில் மட்டும் அந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதில் நாங்கள் இயற்கை பிரசவ முறை பற்றிப் பேசுவதால் சிசேரியன் முறையிலான குழந்தை பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தை பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அதை ஒரு களமாக எடுத்துக்கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களை ஒரு த்ரில்லராகக் கூறியிருக்கிரோம்.
இது போன்ற நடைமுறையில் பிரசவமாகும் பெண்ணுடன் அவள் கணவரும் இருக்க வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்தும் போது, அவர்களுக்கு ஏற்படும் பதற்றம், நம்பிக்கையின்மை … போன்றவற்றை அழகாக திரைக்கதை ஆக்கி இருக்கிறோம். அதை சுவாரஸ்யமாக சொல்லி இருப்பதால் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ரசிப்பார்கள் … என்று நம்புகிறோம். காட்சிக்கு காட்சி படத்தில் எதாவது ஒன்று ரசிகர்கள் எதிர்பாராத விதத்தில் நடந்து கொண்டு தான் இருக்கும்…!” என்றார்.
அவரைத்தொடர்ந்து … இயக்குனர் விக்ரம் ஶ்ரீதரன் பேசுகையில்,
“ஷபீரும், மிர்னாவும் பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருந்தார்கள். அவர்கள் எப்போது இந்தக் கதையைக் கேட்டார்களோ., அதில் இருந்து அர்ப்பணிப்புடன் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள்..!” என்றார்.
ஒரு குழந்தையின் நிஜ எடையில் புராஸ்தடிக் வயிறு ஒன்றை செய்து வைத்திருந்தோம். அத்துடன் அதே அளவில் எடை குறைவான டம்மியையும் செய்து வைத்திருந்தோம். கர்ப்பிணியின் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காக நாயகி மிர்னா , நிஜ எடை கொண்ட வயிற்றின் புராஸ்தடிக் வயிற்றைக் கட்டிக் கொண்டு நடித்தார்.
அந்த வயிற்றுடன் ஷூட்டிங் இடைவேளையில் கூட, தனியாக அமர்ந்து கொண்டு வயிற்றில் குழந்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
ஷபீரும் தனது பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த உணர்வுடனேயே தனிமையில் இருப்பார். இவர்கள் அர்ப்பணிப்புடன் தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டு நடித்ததால், படத்தின் அனைத்து காட்சிகளும் மிகவும் யதார்த்தமாக வந்திருப்பதை நீங்கள் திரையில் நிச்சயம் பார்க்க முடியும்.
கதைக்கான லொக்கேஷன்களை ஏழு மாதங்களாக தேடிய பிறகு மூணாருக்குக் கீழே உள்ள மரையூர் என்ற கிராமத்தைப்பார்த்து அங்கே படப்பிடிப்பு நடத்தினோம். லொக்கேஷன் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் அங்கு எங்களுக்கு ஏற்ற வகையில் நான்கு விதமான செட்கள் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தினோம்.” என்றார்.
“ இது மாதிரி சுகப்பிரசவம் விரும்பும் தம்பதியர் கர்ப்பம் உண்டாகிய 4-5 மாதங்களுக்கு பின் வாரம் ஒரு முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும்.., என்பதையும் , ‘வயித்து பிள்ளைக்காரி …’ என தற்போதெல்லாம் கர்ப்பவதிகளை பெரிதாக வேலை கூட செய்ய விடாத இளைய சமூகத்திற்கு பாடம் சொல்வது போலவும் படம் இருக்குமா ?!” , எனக் கேட்டால் ., விக்ரம் ஸ்ரீதரன் & ஶ்ரீராம் சிவராமன் இருவரும் ஒரு சேர … “பிப்ரவரி -23 வரை பொறுத்திருங்கள்! நிச்சயம் ‘பர்த் மார்க்’ (Birth Mark ) படம் காண்போர் அனைவரையும் திருப்தி படுத்தும்” என்றனர். அதையும் பார்ப்போம் !!
🤓😃😇🤪😄😎😄🤪😇😃🤓
BIRTHMARK CAST:
1) Shabeer Kallarakkal
2) Mirnaa
3) Deepthie
4) Indirajith
5) Porkodi
6) PR Varalakahmi
BIRTHMARK CREW:
1) Director: Vikram Shreedharan
2) Writer and Producer : Sriram Sivaraman, Vikram Shreedharan
3) Music Director: Vishal Chandrashekhar
4) Director of Photography: Udhay Thangavel
5) Production designer: Ramu Thangaraj
6) Editor: Iniyavan Pandiyan
7) Costume designer: Sruthi Kannath
8) Additional Screenplay writer: Anusuya Vasudevan
9) Sound Design: Sync Cinemas
10) Sound mixing: Aravind Menon
11) Colourist/DI : Prateek Mahesh
12) Visual effects : Fix it in Post Studio
13) Production Executive: Ravikumar
14) PRO: Suresh Chandra, Rekha D’one
15) Creative Producer: Sriram Sivaraman
16) Line Producer: Karthee Vel
17) Prosthetics: Vineesh Vijayan
18) Publicity Designer: Gautham J.
19) Assistant Directors: Tony Marshall, Surya Vijayakumar