நமக்கு வந்து News…நாம கேட்ட Talks…
“மார்ச் – 29 , ‘குழந்தையின்மை’ பிரச்சினை பற்றி ஹாஸ்யமாக , சுவாரஸ்யமாக பேச வரும் ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம் !!’
இன்றைய சமூகத்தில் சில பல புது மண ஜோடிகளுக்கு ‘குழந்தையின்மை’ எனும் பிரச்சனை அதிகரித்து வருவதோடு, அது நம் மனித சமூகத்தின் முக்கியமான பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இதை திரைப்படங்களில் மிக சாதாரணமாக கடந்து செல்லும் நிலையில், இதையே கருவாக எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பல விவாதங்களை ஏற்படுத்தும் வகையில், ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.
‘ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ்’ பேனரில் இப்படத்தை தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார் திரவ். கதாநாயகியாக இஸ்மத் பானு நடித்திருக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி , மாஸ்டர் கார்த்திகேயன்… உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் மார்ச் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, பலப்பல வினாக்களையும் எழுப்பியுள்ள நிலையில், ‘வெப்பம் குளிர் மழை’ படம் குறித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து சமீபமாக பேசினர்.
இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இப்படம் குறித்து பேசுகையில், “இன்றைய சூழலில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு பிரச்சனையே இல்லை, ஆணும், பெண்ணும் இணைவதால் ஏற்படக்கூடிய விளைவு. அது நடப்பது நம் கையில் இல்லை … என்ற போதிலும் அதை மிகப்பெரிய பிரச்சனையாக இந்த சமூகம் பார்க்கிறது, அது ஏன்? என்ற கேள்வி தான் இந்த படத்தின் கதை. இப்பட முன்னோட்டத்தில் இடம் பெறும் கணவன் – மனைவி இடையிலான பிரச்சனை எப்படி ? உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியதோ, அது போல் ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படமும் பல கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தும்.” என்றார்.
‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான திரவ் படம் குறித்து கூறுகையில், “நான் ஏற்கனவே நடிகர் கிஷோர் அவர்களை வைத்து ‘மெல்லிசை’ என்ற படத்தை உருவாக்கி வருகிறேன். வெளியாக சற்று தாமதமாகும் அந்த படத்தின் வெளியீட்டுக்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான், இந்த ‘வெப்பம் குளிர் மழை’ கதை என்னிடம் வந்தது. கதை நன்றாக இருந்ததோடு, நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்தியது. குறிப்பாக என் சகோதரி , சித்தி, அத்தை உள்ளிட்ட உறவினர்களில் சிலர் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டார்கள். அதனால் இந்த படத்தினை உருவாக்க முன்வந்தேன். அதன்படி , படத்திற்காக சில நாயக நடிகர்களை நான் சிபாரிசு செய்து, அவர்களிடம் இப்பட இயக்குநரை கதை சொல்ல வைத்தேன். அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், அவர்களுடைய தேதி சரியாக அமையாததால் அவர்களால் இப்படத்தை பண்ண முடியவில்லை. பிறகு ‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரிக்க முடிவு செய்து, நாயகர்களை தேடிக்கொண்டிருந்த போது அப்போதும் சரியாக அமையவில்லை. அப்போது தான் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா? என்று கேட்டு நடிக்க களம் இறங்கினேன் என்றார்.
மேலும் , “நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரிக்கவில்லை, படத்தின் கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று என்பதால் தான் தயாரிக்க முன் வந்தேன். ‘குழந்தையின்மை’ என்பது நிச்சயம் தனிமனித பிரச்சனை இல்லை, சமூகம் சார்ந்த பிரச்சனை, ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்கள் அதைப்பற்றி பேசி பேசியே அதை தனிமனித பிரச்சனையாக உருமாற்றி, சம்மந்தப்பட்டவர்களை மனதளவில் உடைந்துபோக செய்துவிடுகிறார்கள். அப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளும் நாயகன், நாயகியின் வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு, குழந்தையின்மை பிரச்சனையையும் அதைச் சார்ந்த சில சம்பவங்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் மக்களிடம் விவாதத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
நாயகி இஸ்மத் பானு தன் அனுபவத்தை கூறுகையில், “நான் மீடியா தொடர்பாக படித்துவிட்டு, மீடியாவில் தான் பணிபுரிந்தேன். பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினேன். இந்த படத்தில் கதா நாயகியாக நடித்திருந்தாலும் பாண்டி என்ற கதாபாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என்னை ஒப்பந்தம் செய்யும் போதே., கணவன் – மனைவியிடையேயான நெருக்கமான காட்சிகள் படத்தில் ஆங்காங்கே இருக்கும் தங்களுக்கு நடிக்க சம்மதமா? என்று கேட்டார்கள். நெருக்கம் என்றதும் வேறு விதமாக நினைக்க வேண்டாம், தம்பதிக்குள் தாம்பத்யம் தான் இருக்கும் அது அந்நியோன்யமாக யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் முதலிலேயே அதை சொல்லி நடிக்க சம்மதமா எனக் கேட்டார்கள். அதன்படி, நானும் பாண்டி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும். தொடர்ந்து, நல்ல நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.” என்றார்.
’குற்றம் கடிதல்’ உள்ளிட்ட இன்னும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்த சங்கர் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையுமே கிராமத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் சங்கர், தன் இசை இப்படத்தின் இன்னுமொரு கதாபாத்திரமாக பயணிக்கும் என்று தெரிவித்தார்.
‘ வெப்பம் குளிர் மழை ’ படப்பிடிப்பு சிவகங்கை மாவட்ட பகுதியில் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பே இப் படப்பிடிப்பு நடத்தப்பட்ட கிராமத்துக்கு சென்று, அந்த மக்களுடன் பழக தொடங்கிய இப்படத்தின் நட்சத்திரங்கள் ., அக்கிராம மக்களோடு சேர்ந்து நடிக்கவில்லை இப்பட பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளில் இப்பட நட்சத்திரங்களும் அந்த கிராம மக்களில் சிலரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்களாம். குறிப்பாக இயக்குநரின் அம்மா, சகோதரி … இயக்குநரது உறவினர்கள் சிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்களாம். ஆனால், அவர்களுடைய நடிப்பை பார்க்கும் போது, இது அவர்களுக்கு முதல் படம் என்று சொல்ல முடியாத வகையில் சிறப்பாக இருக்கும், என்று தெரிவித்த படக்குழுவினர் ‘ வெப்பம் குளிர் மழை ’ படம் நிச்சயம் மக்களுக்கான படமாகவும் பாடமாகவும் இருக்கும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள். அப்புறம் என்ன? நாமும் நம்புவோம் !!
“நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரிக்கவில்லை, படத்தின் கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று… என்பதால் தான் தயாரிக்க முன் வந்தேன். ‘குழந்தையின்மை’ என்பது நிச்சயம் தனிமனித பிரச்சனை இல்லை, சமூகம் சார்ந்த பிரச்சனை .ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்கள் அதைப்பற்றி பேசி பேசியே அதை தனிமனித பிரச்சனையாக அதை உருமாற்றி,. விடுகின்றனர் . ” என்று இப்பட அறிமுக கதாநாயகரும் தயாரிப்பாளருமான திரவ் கூறுவதில் எல்லாம் நமக்கு மாற்று கருத்தில்லை.. ‘வெப்பம் குளிர் மழை’ இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து., கடைசி வரை பிடிவாதமாக ,” வேறு நாயகி பார்ப்போம் சினிமாவிற்கு இவர் சரிபட்டு வர மாட்டார் …’ என எவ்வளவோ மறுத்தும் , இப்பட நாயகியாக இஸ்மத் பானுவை தான் போட வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று அவரையே இப்பட நாயகியாக்கி சாதித்து விட்டதற்கு காரணம் ., இஸ்மத் பானு , அச்சு அசல் கிராமத்து இளம் பெண்ணாக தெரிவதம் , அரிதாரம் பூசிய அழகியாக சினிமா முகமாக இல்லாதது மட்டும் தான் காரணமா ? இல்லை வேறு ஏதும் காரண காரியம் இப்பட தயாரிப்பாளரும் அறிமுக நாயகருமான திரவ்விற்கு இருக்கிறதா ..? ” என இந்த ‘வெப்பம் குளிர் மழை’ பட பிரஸ்மீட் டிற்கு வந்த சில பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கேட்டு சென்றது இந்த செய்தியின் வாயிலாக நடிகர்/ தயாரிப்பாளர் திரவ் காதுகளுக்கும் சென்றிடும் என நம்புவோம் !! ஹீ… ஹீ… எப்படி .?!
🤓😎🤪😇😱😃😱😇🤪😎🤓