இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய குறும்படம் ‘மூடர்’

213

ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் ‘மூடர்’.

கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்டுக்கு முன்பே உருவான இக்குறும்படம், அண்மையில் தான் வெளியானது. :பிஹைன்வுட்ஸ்’ தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இக்குறும்படத்திற்கு பெங்களூரில் AISC விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் பெற்றுள்ளன.

இப்படத்தை இயக்கி இருப்பவர் தாமோதரன் செல்வகுமார்.

இப்படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பிரபலமானவர்கள். விஜய் டிவி ‘ராஜாராணி’ புகழ் கார்த்திக் சசிதரன்,சன் டிவி ‘பாண்டவர் இல்லம்’ புகழ் ஆர்த்தி சுபாஷ் , ‘கல்லூரி’ படத்தில் நடித்த மதன் கோபால் ,’உறியடி2 ‘ சசி குமார், பிர்லா போஸ், அனிஷா சக்தி முருகன், வினோத் லோகிதாஸ், சிவகுமார் ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு-கலை சக்தி ,இசை ஜே.சி.ஜோ,எடிட்டிங்- எம்.கே. விக்கி.
இக்குறும்படத்தை பல்லவாஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
படம் பற்றி இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் பேசும்போது

“நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதி ல்லை. சினிமா மீது உள்ள காதலால் ஏழு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு ‘மூடர் ‘ குறும்படத்தை எடுத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதற்கு முன்பும் சில குறும்படங்கள் எடுத்து இருந்தாலும் இதில் ஒரு திரைப்படத்திற்கான முன் முயற்சியாக முழு உழைப்பைப் போட்டிருக்கிறோம். அடுத்து ஒரு திரைப்பட முயற்சியில் இறங்கி இருக்கிறோம் .ஓடிடியில் வெளியிடும் வகையில் அப்படம் உருவாக இருக்கிறது” என்கிறார்.