நமக்கு வந்த News..நாம கேட்ட Talks..

80

 

“படப்பிடிப்பில் இளம் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் !!”

தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு அவரை உடனடியாக மருத்துவமைனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார்.

K C பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் ‘ கருப்பு பெட்டி ‘ எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் K C பிரபாத் “யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இரவுபடப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை படக்குழு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் K C பிரபாத் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள ‘கருப்பு பெட்டி ‘ வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

நடிகர் K C பிரபாத்துக்கு உண்மையாகவே படப்பிடிப்பில் மாரடைப்பு தானா ? இல்ல அவர் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள “கருப்பு பெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறதே அதற்கான பப்ளிசிட்டி பில்டப்பா ? என நம் பத்திரிகையாள மூளை விசாரணையில் இறங்கியதில் , ஹார்ட் அட்டாக் சிம்ஸ் ஹாஸ்பிடல் அட்மிட் எல்லாம் உண்மைதான் எனும் தகவல் கிடைத்தது. அப்புறமென்ன ., அவர் விரைந்து குணமாகி தான் கதாநாயகராக நடித்துள்ள ‘கருப்பு பெட்டி ‘ பட புரமோஷனுக்கு வந்து சேரட்டும் ஹீ… ஹி..!

😃😍🥰😇🥹😝🥹😇🥰😍😃