திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303

315

?இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303

?மொத்தமுள்ள 27 பொறுப்புகளுக்கு112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

?தலைவர் பதவிக்கு போட்டியிடும்
ராமசாமி@முரளி,
T.ராஜேந்தர்,
P.L.தேனப்பன் ஆகிய மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்

?துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அணியின் சார்பில் போட்டியிடும்
சிவசக்தி பாண்டியன்
R.K.சுரேஷ், P.T.செல்வகுமார்
அடிதடி முருகன் இவர்களை காட்டிலும்
சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவடிவேலன்
கதிரேசன் இருவரும் கடும் போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
?கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திரபோஸ் இடையில் கணிக்க முடியாத போட்டியாக உள்ளது
?பொருளார் பதவிக்கு அணியின் சார்பில் போட்டியிடும் கே.ராஜன்-சந்திரபிரகாஷ் ஜெயின் இருவருக்குமான போட்டி சந்திரபிரகாஷ் ஜெயின்-சுயேச்சையாக போட்டியிடும் JSK சதிஷ்க்குமான போட்டியாக மாறியுள்ளது

?நலம் காக்கும் அணி சார்பில் நேற்றைய தினம் வாக்களர்களுக்கு வழங்கப்பட இருந்த அன்பளிப்பை வழங்கவிடாமல் எதிர் அணி காவல்துறையில் புகார் செய்து தடுத்ததால் அவர்களுக்கான ஆதரவு வாக்கு நலம் காக்கும் அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது

?ஒட்டுமொத்தமாக ஒரே அணி வெற்றியை அறுவடை செய்வது சாத்தியமில்லை

?சுயேச்சைகள் ஆதிக்கம் துணை தலைவர் பதவியில் இருப்பதற்கு காரணம்”கரன்சி மழை” வளமாக சென்றந்ததே காரணம் என்கின்றனர்

?அரசியல் கட்சிகள் தேர்தலில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு 2000ம் ரூபாய் வரை இந்தியாவில் வழங்கியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 20,000 ம் ரூபாய் வரை கிடைத்துள்ளது

?60% வாக்காளர்கள் அன்பளிப்பு, கரன்சிகளை வேண்டாம் என கூறியுள்ளனர்

?இன்று நடைபெற்றுவரும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தரப்பில் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது

?இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

?நாளை23.11.2020 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது