நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

1,254
அண்ணன் அலுவலகத்தில்., தம்பி பிறந்தநாள் கோலாகலம் !! 

 

ஜுலை 21 இன்று
நடிகர் அருள்நிதியின் பிறந்த நாள் (அட ,தாத்தா கலைஞர் மாதிரியே பேரனும் நியூமராலஜிபடி பிறந்தது 3ம் எண்ணில் …) !

அதையொட்டி நடிகர் அருள்நிதியின் பிறந்த நாள்
இன்று உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லைகா புரொடக்‌ஷன்ஸ் CEO தமிழ்குமரன் மற்றும் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ அலுவலகத்தினர் கலந்து கொண்டனர்.

அருள்நிதி நடிப்பில் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள “தேஜாவு” திரைப்படத்தை நாளை ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தனது பேனரில் திரையரங்குகளில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த பிறந்த நாள் பிரஸ் ரிலீஸ் அனுப்புனவங்க , “அது சமயம் அருள்நிதியின் அண்ணனும் எம் எல் ஏவும் நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அதிபருமான உதயநிதி ஸ்டாலின் அரசியல் வேலைகளால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லைன்னு …” ஒரு வரிய சேர்த்து அனுப்பியிருக்கலாம்ல…. ஏற்கனவே அருள்நிதி படங்கள் 3 – 4 படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில் ஊரு படங்களை எல்லாம் வாங்கி ரிலீஸ் பண்ணித்தரும் அண்ணன் உதயநிதி, தன் தம்பி படங்களை மட்டும் வாங்கி வெளியிட மாட்டேங்கிறாருன்னு….திருவாளர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப்களில் முழங்கு முழங்குன்னு முழங்கி வருகிறார். இப்போ , தன் ரெட் ஜெயன்ட் அலுவலகத்துல தம்பி அருள்நிதிய கேக் வெட்ட கூப்பிட்டுட்டு… அவரு ‘வெளிநடப்பு ‘ன்னு பேசப்போறார்… என இரண்டு பத்திரிகையாளர்கள் இந்த பர்த்டே நியூஸ் பிரஸ் ரிலீஸைப் பார்த்து வேறு ஒரு பிரஸ் ஷோ வில் கிசுகிசுத்து சென்றது., ஹீ… ஹீ…. நம் காதிலா விழ வேண்டும் .?!

 

🤪😀😀😳😇😳😀😀🤪