நமக்கு வந்த News.. நம்ம கேட்ட Talks…
“ஹீரோக்களில், அப்பொழுது., கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய். ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் !”
-‘குருமூர்த்தி’ பட விழாவில் ரகசியத்தை உடைத்த ஆர்கே செல்வமணி !!
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நடிகர் நட்டி கதைநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.
சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்
இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் , ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்
இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசும்போது,“ இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், ‘புஷ்பா’ படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்று கூறினார்.
நடிகர் ரவிமரியா பேசும்போது,
“இந்தப் படத்தின் ‘குருமூர்த்தி’ என்கிற டைட்டிலே படத்திற்குப் பலம் தான். புதிதாகப் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லியே படம் எடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு புரொடக்சன் மேனேஜரே தயாரிப்பாளராக வந்துள்ளதால் இந்தப் படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் இடமே ஏற்படவில்லை. நான் நடிகராக மாறியதும் டைரக்சனை அப்படியே தள்ளிவைத்துவிட்டு தான் வந்தேன். அதேபோல இந்த படத்தின் இயக்குநர் இதுநாள் வரை ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் ., இனி , ஒளிப்பதிவு அல்லது டைரக்சன் என ஏதோ ஒன்றில் கவனம் செலுத்தி பயணிக்க வேண்டும்.
பத்து வருடத்திற்கு முன்பு நட்டியை ஹீரோவாக வைத்து மிளகா என்கிற படத்தை இயக்கினேன். ஆனால் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். கதாநாயகிகள் அனைவரும் இந்த விழாவில் ஒற்றுமையாக கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மிளகா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றிய பாசில் தான் இந்த படத்திற்கு எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். அப்போதே அவர் பெரிய இடத்திற்கு வருவார் என கூறினேன்’’என்றார்.
நடிகை பூனம் பஜ்வா பேசும்போது,
“இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார் என்றார்.நடிகர் ராம்கி பேசும்போது,
“கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். . ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் ? என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை.. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்பதால் பலபேர் நடிப்பு பக்கம் கிளம்பி விட்டார்கள்.. காரணம் நடிகர்கள் கையில்தான் சினிமா இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து சிரமம் தரக்கூடிய, தயாரிப்பாளர்கள் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி ..பேசும்போது..
இந்த ‘குருமூர்த்தி’ படம் , நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை. வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி வாராக்கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக்கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது? இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நலநிதி கூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, ஆனால் அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றும் வரவேண்டும்.. அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்று கூறினார்.
இறுதியாக ., வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே ராஜன் பேசும்போது,
” சர்ச்சையாகப் பேசுபவன் என்று கூறுகிறார்கள்.. நான் இந்த சினிமா தொழில் பாதிப்புக்கு காரணமானவர்களை நிச்சயம் விமர்சிப்பேன்.. பட விழாக்களுக்கு நடிகர்கள் வரவேண்டும் என சொல்வது எங்களுக்காக அல்ல.. வந்தால் உங்களுக்குத் தான் லாபம்.. தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டாலும் கூட அது நடிகர்களுக்குத் தான் லாபம்.
படத்தின் வெற்றி தோல்விக்கு இயக்குநர் தான் காரணம்.. ஆனால் படம் வெற்றி பெறும்போது ஹீரோ சம்பளத்தை ஏற்றுகிறார். தோல்வி அடையும் போது அவர் சம்பளத்தைக் குறைப்பதில்லை.. ஆனால் இயக்குநர் தான் பாதிக்கப்படுகிறார். அதுமட்டுமல்ல படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரோடு அந்த படத்தின் விநியோகஸ்தர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ‘பொன்னியின் செல்வன் ‘ மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்துள்ள இயக்குநர் மணிரத்னம் கூட ஆந்திராவில் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார். இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தினால் தான் இங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.. இங்கு இருப்பவர்கள் ஆந்திராவில் சென்று தீபம் ஏற்ற வேண்டுமா..?
அதேபோல பெரிய நடிகர்கள் நடித்தால்தான் திரையரங்குகளுக்குக் கூட்டம் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. சிறிய படமாக பெரிய அளவில் பிரபலம் இல்லாத இயக்குநர் அவரே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள ‘லவ்டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப படம் இருப்பதை தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் மூலம் காணமுடிகிறது. நல்ல படங்களைக் கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு நிச்சயம் வருவார்கள்.. அதற்கு பெரிய நடிகர்கள் தான் வேண்டும் என்கிற அவசியமில்லை” என்று கூறினார்.
‘குருமூர்த்தி’ பட விழாவில் மேற்கண்டவர்களை தொடர்ந்து இப்பட நடிகர் நட்டி , பாடலாசியர் வெள்ளத்துரை , இசையமைப்பாளர் சத்யதேவ்… உள்ளிட்ட இன்னும் பலரும் பேசினர்.
இயக்குநர் பேரரசு பேசும்போதும், இப்பட நாயகர் நட்டியை பெரிதாக தூக்கி பேசாமல் நடிகர் ராம்கியை “ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி , ‘குருமூர்த்தி’ படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.” என்று பேரரசு பேசியதும் ., அவரைத் தொடர்ந்து பேச வந்த பெப்சி தலைவர் இயக்குனர்
ஆர்.கே.செல்வமணியும்
“ஹீரோக்களில், அப்பொழுது., கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய். ராம்கி வெளியே தெரியாத பிளேபாய் !” என ராம்கி பற்றியே பேசினார்.இவர்களுக்கு முன் பேசிய இயக்குனர் நடிகர் ரவிமரியாவும்., “பத்து வருடத்திற்கு முன்பு நட்டியை ஹீரோவாக வைத்து ‘மிளகா’ என்கிற படத்தை இயக்கினேன் நான். ஆனால், இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். என அப்பொழுதே நட்டியை ஹீரோவாக பார்த்த தன்னை, தான் (ரவிமரியா) ., கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகியும் பத்து வருடங்களாக தான் (நட்டி) , ஹீரோவாக நடிக்கும் படங்களில் வாய்ப்பு தராமல் தட்டி கழித்துள்ளார்…. நட்டி… என்பதை மறைபொருளாக பேசியதும் ., நட்டி யை உருட்டி புரட்டி போட்டிருக்கும்ல…” என கேட்டபடி ., விழாவிற்கு வந்த சீனியர் சினிமா பத்திரிகையாளர் ஒருவர் ஜுனியர் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசி சென்றது நிச்சயம் நட்டி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை… ஹீ…ஹீ..!
🤪🤪😳🥹😇🥹😳🤪🤪