நமக்கு வந்த News…நம்ம கேட்ட Talks..
‘பருந்தாகுது ஊர்குருவி’ பட இயக்குனர் தனபாலன் அண்ணா., உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன் !”
பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் Open talk !!
‘லைட்ஸ் ஆன் மீடியா ‘ வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்
குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில்
தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா பேசியதாவது..,
இந்த படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கிசந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த படம் மார்ச் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் பேசியதாவது,
நான் இங்கு வந்ததற்கு முதல் காரணம் நண்பர் சுரேஷ், அவர் முதன்முதலில் என்னிடம் ஒரு கதையைச் சொல்லத்தான் வந்தார். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாகச் சொன்னார், சுரேஷ், சுந்தர் மற்றும் வெங்கி மூன்று பேரும் நல்ல நண்பர்கள். இணைந்து ஒரு நல்ல படைப்பை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் ஜெயிக்கும்’ என்றார்.பிரபல தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் பேசியதாவது,
‘ராஜாவிற்கு ராஜபாதை என்பது தேவையில்லை என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப இந்த படம் உருவாகியுள்ளது, உழைப்பு, நேர்மை இருந்தால் ஊர்க்குருவி பருந்தாகும். அது போல இந்த படைப்பு உருவாகியுள்ளது. டாடா, அயலி போன்ற சிறிய படைப்புகள் வெற்றி பெறும்போது தயாரிப்பாளராக எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. பெரிய படம் சிறிய படம் என்று பார்க்காமல் சிறிய படங்களை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் பேசியதாவது,
‘இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது ஆங்கிலப் படத்தின் டிரெய்லரைப் போன்று உள்ளது. ஒளிப்பதிவு அருமையாக உள்ளது. பருந்தாகுது ஊர் குருவி படம் வெளியான பின்னர் நாம் அனைவரும் இவர்களை மேலே தான் பார்க்க முடியும். அனைவரும் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.இயக்குநர் விருமாண்டி பேசியதாவது,
‘ஒரு படத்திற்குத் தலைப்புதான் முக்கியம் அதைப் பார்த்துத் தான் தியேட்டருக்கு வருவார்கள். இந்த தலைப்பை கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தின் கதைக்களம் “பெட்டி கேஸ்” ஐ பற்றிப் பேசுவதாகத் தெரிகிறது, படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்’ என்றார்.
.நடிகர் கோடாங்கி பேசியதாவது,
‘நான் பேச நினைத்ததெல்லாம் அனைவரும் பேசி விட்டனர். இயக்குநருக்கு நன்றி, ஏனென்றால் ஆறு நாள் எனக்குப் படப்பிடிப்பு என்று கூறி, ஆறு நாளும் என்னை வைத்துப் படத்தை எடுத்தார். சில இயக்குநர்கள் 10 நாள் எனச் சொல்லி ஒரு நாள் தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள் அனைத்து வேலைகளையும் மிகவும் ஈடுபாட்டோடு செய்தனர். இந்த பெரும் காட்டில் என்னையும் ஒரு சிறு அணிலாக இணைத்துக் கொண்டதற்கு நன்றி’ என்றார்.தயாரிப்பாளர் சுரேஷ் EAV பேசியதாவது…
‘நானும் சுந்தரும் பேசிக்கொண்டிருக்கும் போது, விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது தான் இந்தப்படம். எங்களுக்கு கிடைத்த டீம் தான் இந்தப்படம் சிறப்பாக வரக்காரணம். ஷீட்டிங் பெர்மிசன் எல்லாமே ஐயப்பன் தான் பார்த்துக்கொண்டான். பெயர் போடாத தயாரிப்பாளர் அவன். அருண் போஸ்ட் புரடக்சனுக்காக வந்தவர் பார்ட்னராக மாறிவிட்டார். நன்றி சொல்ல வேண்டிய லிஸ்ட் மிகப்பெரியது. நண்பர்கள் வட்டாரத்தால் உருவான படம் இது. கண்டிப்பாக உங்களை இந்தப்படம் திருப்திப்படுத்தும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசியதாவது… ‘படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக்கொடுத்தது தான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப்படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம். சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி வரை உடனிருக்கும் நண்பர்கள். வெங்கி சந்திரசேகர் மற்றும் அருண் ஆகியோரும் எங்களுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள். இந்தப்படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும் நன்றி. என் உதவியாளர்கள் நாளைய உதவி இயக்குநர்கள். இந்தப்படம் ஒரு சிறப்பான அனுபவம் தரும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, ஆதரவளியுங்கள் என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..
‘தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்னாலே அவர் இயக்குநராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான் சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்டது விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். மேலும் இந்தப்படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கிஇருக்கிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர் கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( ‘டான் ‘ படப்புகழ் ) நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, போஸ்ட் புரடக்சன் தலைமை – அருண் உமா உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் இன்னும் சிலரும் மேலும் சில திரை பிரபலங்களும் இந்நிகழ்வில் இத்திரைப்படம் பற்றி அந்த சந்திப்பில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.‘பருந்தாகுது ஊர்க்குருவி’ அப்படின்னா, பருந்து என்னவாகும் .?! அப்படின்னு ஒரு கேள்வி நம்மையும் அறியாமல் எழுந்தது. நம்மை போல் அக்கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும் என்பது மட்டும் உண்மை. படக்குழுவினர் குறிப்பாக இயக்குநர் தான் பதில் சொல்ல வேண்டும். படத்தில் பதில் இருக்கும் என நம்புவோம் !
😄😇🤪😎😩😎🤪😇😄