நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…
“மதுவுக்கு எதிராக வீரப்பனின் மகள் நடித்துள்ள ‘மாவீரன் பிள்ளை’ திரைப்படம் !”
– பாராட்டிய எச்.ராஜா !!
‘மாவீரன் பிள்ளை’ படத்தை எச் ராஜா , நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் மோகன் ஜி, கணேஷ் பாபு மற்றும்
ஜே எஸ் கே கோபி என பலர் இணைந்து பார்த்தனர்…படத்தைப் பார்த்து பேட்டி அளித்த எச். ராஜா தமிழகத்தில் மதுவை அறிமுக படுத்தியது திமுக ஆட்சியில் கலைஞர் தான் என்றார்
தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடினார் ஆனால் தற்போது அவர் அரசியல் மதுவுக்காக டார்கெட் நிர்ணயித்து விற்பனை செய்ய சொல்லி விற்பனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்..இயக்குனர் தம்பி ராஜா மதுவிற்கு எதிராக ஒரு நல்ல படம் தந்துள்ளார்.. இது போன்ற படங்கள் அதிகப்படியாக தமிழ் சினிமாவில் வரவேண்டும் .இன்று , தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்கள் இந்த நிலை மாற இப்படியான பல பாடங்கள் வர வேண்டும் என்று படத்தின் இயக்குனரை யுஎம்எல் ‘மாவீரன் பிள்ளை’ படத்தினையும் பாராட்டி பேசினார் .
அவரைப் போன்று ., மதுவுக்கு எதிராக ‘சந்தன வீரன் ‘ வீரப்பனின் மகள் நடித்துள்ள ‘மாவீரன் பிள்ளை ‘ படம் பார்த்த நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் மோகன் ஜி, கணேஷ் பாபு மற்றும்
ஜே எஸ் கே கோபி .. உள்ளிட்டோரும் இப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தனர்.மதுவுக்கு எதிராக ‘சந்தன வீரன்’ வீரப்பனின் மகள் ‘மாவீரன் பிள்ளை’ படத்திலும் வீரப்பனின் மனைவி இப்பட விழா மேடைகளிலும் கூக்குரல் இடுவதும் அதை எச்.ராஜா உள்ளிட்டோர் ஆதரிப்பதும் சரி. அரசு செவி சாய்க்க வேண்டுமே .?! என அத்திரையரங்க வாசலில் நின்றிருந்த சிலர் நம் செவிகளில் விழுந்தாயிற்று. அரசு இயந்திரத்தின் செவிகளிலும் , ஆள்வோரின் காதுகளிலும் விழுமா .?!
😜😇😎😇🤪😩🤪😇😎😇😜