CSK vs KKR: சென்னை சிங்கங்களை மிரட்டிய பௌலர்கள்…கொல்கத்தா அணி த்ரில் வெற்றி!
அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க வீரர் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸல் போன்றவர்கள் ரன்களை குவிக்கத் திணறினர். மொத்தம் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இருப்பினும், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகள் விளாசி 81 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில், கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் சேர்த்தது.
KKR vs CSK Match Highlights: டஃப் பௌலிங்…10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வென்றது கேகேஆர்!
சிஎஸ்கே அணியின் டுவைன் பிராவோ 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். சாம் கரன், சார்துல் தாகூர், கரண் ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.