நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
விஜய் டி.வி.யின் “Cooku with கோமாளி” தெரியும்.சன் டி.வி.யின் ரஜினி with விஜய் சேதுபதி தெரியுமா .?!
இந்த டி.வி யில பேமஸா இருக்கிற நிகழ்ச்சிய அந்த டி.வி யிலும், அந்த டி.வியில பேமஸா இருக்கிற நிகழச்சிய இந்த டி.வி யிலும் ஈ அடிச்சான் காப்பியடிச்சு போட்டி போட்டு நிகழ்ச்சி வழங்குறதுல நம்மூர் சாட்டிலைட் சேனல்களை அடிச்சுக்க முடியாதுங்கறது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த வரிசையில விஜய் டி.வி யில பேமஸாக இதுநாள் வரை வந்து இன்றோடு 2 வது சீஸன் முடிந்த “Cooku with கோமாளி” நிகழ்ச்சியை முடித்து வைக்க நடிகர் STR @ சிம்பு வந்தததும், அதற்கு முன்பே அந்நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆனதும் தெரியும்.
இதைப்பார்த்ததும், சன் டி.வி இவ்வளவு நாள் சும்மா இருந்ததே பெருசு .?! ‘Cooku with கோமாளி‘ நிகழச்சி மாதிரியே சன் டி.வி.தரப்பு இப்போ., ஆஸ்திரேலியாவின் பிரபல சேனல் ஒன்றின் சமையல் நிகழ்ச்சியான “மாஸ்டர் செஃப்” நிகழ்ச்சியின் ரைட்ஸை அப்படியே வாங்கி இப்போ ஷூட் பண்ணிட்டிருக்காம். கூடிய விரைவில் டெலிகாஸ்ட்டும் பண்ண இருக்காம் ..இப்படி ஒரு தகவல் கோலிவுட்டில் வெகுவேகமாக பரவி வருகிறது . இதுல ஹைலைட் ., இந்த நிகழ்ச்சிய தொகுத்து வழங்குறது நடிகர் விஜய்சேதுபதி ,
முதல் எபிசோட்டில் பங்கெடுத்திருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினி இதற்காக ரஜினிக்கு ‘அண்ணாத்த’ சம்பளம் இல்லாம தனியாக சுளையாக 2 கோடி சம்பளமாம் .ஒவ்வொரு எபிசோட்டுக்கும் விஜய் சேதுபதிக்கு சில அல்ல பல லகரங்கள் சம்பளமாம். ரஜினி பங்கெடுக்கும் முதல் எபிசோட் மட்டும் ரஜினி வசதிக்காக அவரது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் விஜய் சேதுபதி காம்பினேஷனில் ஷூட் செய்யபட்டுவிட்டதாம்.
விஜய் TV ., “Cooku with கோமாளி” நிகழ்ச்சியின் 2 வது சீஸனை முடித்த வைக்க சிம்பு சீஃப் கெஸ்ட்டாக கலந்து கிட்டாரென்றால் ., “Cooku with கோமாளி” நிகழ்ச்சிக்கு போட்டியாக Sun Tv யில் வர இருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் அதிகார பூர்வ காப்பியில் (ரைட்ஸ் வாங்கி பண்றாங்கள்ல…) opening-ல் ரஜினி., ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதின்னு , அசத்துற சன் டி.வி தரப்பு ., இதற்காக ‘அண்ணாத்தே’ பட சம்பளம் தவிர்த்து தனியாக 2 கோடி கொடுத்தது சரி ., கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு அன்பு கட்டளையோட அதே டி.வி.நிறுவனம் இதே உச்ச நடிகருக்கு
2 x 250 C கொடுத்ததா ஒரு கிசுகிசு உலா வருதே அது உண்மையா ? பொய்யா .?! என இதைப்படிக்கிற நீங்களெல்லாம் புலம்பறது புரியறது… ஆனா., இதை , யாருகிட்டே கேட்கிறது .?!😀 😆 😆 😆 😀